வீடு புகுந்து சாத்திருவேன்: ஜாக்குலினை மிரட்டிய பக்கத்து வீட்டு நபர்
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாகவும் ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருபவர் ஜாக்லின். இவர் தனது கலகலப்பான பேச்சால் அனைவரையும் கவர்ந்துள்ளார் என்பதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இவர் தற்போது நடித்து வரும் ’தேன்மொழி’ என்ற தொலைக்காட்சி தொடர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜாக்லின் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு செய்து அதில் தனது பக்கத்து வீட்டுக்காரர் மிக மோசமாக தன்னை திட்டியதாக கூறியுள்ளார். ஊரடங்கு நேரத்தில் பசியாக இருக்கும் தெரு நாய்களுக்கு தனது வீட்டின் கேட் அருகே உணவு வைத்ததாகவும் அந்த உணவை சாப்பிட வந்த தெருநாய்களை நோக்கி தனது வீட்டில் இருந்த நாய்கள் குரைத்ததாகவும், இதனால் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு மிகவும் தொந்தரவாக இருந்ததாகவும் அப்போதுதான் தனது தவறை தான் உணர்ந்ததாகவும் ஜாக்குலின் தெரிவித்திருந்தார்.
ஆனால் அதற்காக பக்கத்து வீட்டுக்காரர் கடுமையாக திட்டியதாகவும் குறிப்பாக வீடு புகுந்து வந்து சாத்திடுவேன், நீ கிறிஸ்டின் பொண்ணா இருக்கிறதாலதான் விட்டு வைக்கிறேன் என்று அவர் கூறியது தன்னை மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் பதிவு செய்துள்ளார்.
இந்த சின்ன விஷயத்திற்காக எதற்காக மதத்தை எல்லாம் இழுக்கின்றார்கள் என்று எனக்கு புரியவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் ஜாக்குலின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com