என்னவொரு கனிவு? நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ்-ஐ கொண்டாடும் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,May 09 2023]

பாலிவுட் சினிமாவில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவரும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் தொடர்ந்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளில் சிக்கி வருகிறார். ஆனாலும் அதே உற்சாகத்துடன் சினிமா மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்திவரும் அவரை ரசிகர்கள் தற்போது பாராட்டி வருகின்றனர்.

பிரபல இசையமைப்பாளர் அன்ஷீல் கார்க்கின் பிறந்தநாள் விழா நேற்று மும்பையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்விற்கு சோனு சூட், திஷா பதானி, இஷா குப்தா, மௌனி ராய் போன்ற பிரபலங்கள் வருகை தந்தனர். அதேபோல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ்ஸும் இந்த விழாவிற்கு வந்திருந்தார். அவர் காரை விட்டு இறங்கிய உடனேயே வயதான மூதாட்டி ஒருவர் நடிகை ஜாக்குலினை வழிமறித்தார். ஆனால் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாத ஜாக்குலின் மூதாட்டின் கையைப் பிடித்து உரையாடினார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து கருத்து பதிவிட்ட ரசிகர்கள் சிலர் ஜாக்குலினுக்கு என்னவொரு கனிவு? ரசிகர்களை எப்படி அணுக வேண்டும் என்று அவருக்குத் தெரிந்திருக்கிறது. இதே மூதாட்டிதான் மற்றொரு பாலிவுட் நடிகையை வழிமறித்து பேசினார். ஆனால் அப்போது நடந்ததோ வேறு. அந்த மூதாட்டியிடம் முரட்டுத்தனமாக அந்த நடிகை நடந்துகொண்டார். ஆனால் ஜாக்குலின் கனிவோடு பேசுகிறார். அவரை பிடித்திருக்கிறது என்று கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

பெங்களூர் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமான நட்பில் இருந்ததாகவும் ரூ.100 கோடி மோசடி வழக்கில் இவருக்கும் தொடர்பு இருப்பதாகவும் நடிகை ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் தன்னுடைய உணர்வுடன் விளையாடி சுகேஷ் ஏமாற்றிவிட்டதாகக் கூறிய ஜாக்குலின் தற்போது ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.

இதற்கு முன்பு கோடை காலத்தில் விலங்குகளுக்கு தண்ணீர் வையுங்கள் என்று இன்ஸ்டாவில் கோரிக்கை விடுத்த நடிகை ஜாக்குலின் தற்போது மூதாட்டி ஒருவரிடம் மிகவும் கனிவுடன் நடந்து கொண்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்ததோடு மற்ற நடிகைகள் இவரைப் பார்த்து கற்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More News

பிறந்தநாள் கொண்டாடும் இளம் நடிகர் விஜய தேவரகொண்டா… நீங்கள் அறியாத 5 சீக்ரெட்!

தமிழ், தெலுங்கு சினிமாவில் துள்ளலான நடிப்புடன் இளம் ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா தனது 34

'மானிட உருவத்தில் வாழ்ந்த கடவுள்: பிரபாஸின் 'ஆதி புருஷ்' டிரைலர்..!

பிரபாஸ் நடித்து வரும் 'ஆதி புருஷ்' என்ற  திரைப்படத்தின் டிரைலர் மே 9ஆம் தேதி  வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. உலகம் முழுதும் இந்த ட்ரெய்லரை 70 நாடுகளில் உள்ள திரையரங்குகளில்

மாதவன் - நயன்தாராவின் 'தி டெஸ்ட்' படத்தில் இணைந்த 'ரன்' பட நடிகை..!

நடிகர் மாதவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்க இருக்கும் 'தி டெஸ்ட்' என்ற திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் சித்தார்த் மற்றும் ராஷி கண்ணா

ஜுப்லி ஹில்ஸ் பகுதியை காலி செய்கிறாரா? நடிகை சமந்தா வாங்கிய புது வீடு குறித்த தகவல்!

நடிகர் நாகசைதன்யாவுடனான மணமுறிவுக்குப் பிறகு நடிகை சமந்தா முன்பு குடியிருந்த ஜுப்லி ஹில்ஸ்

சினிமாவில் ஆணாத்திக்கம் இருக்கு… 32 வருட சினிமா வாழ்க்கை குறித்து பேசிய மணிரத்னம் பட நடிகை!

இயக்குநர் மணிரத்னம் இயக்கிய ‘பம்பாய்’ திரைப்படம் மூலம் இந்தியா முழுக்கவே பிரபலமானவர் நடிகை மனிஷா கொய்ராலா.