தாய்க்குலங்களை மதிக்கிறேன்னு சொல்லாதீங்க.. ஜாக்குலின் ஆவேசம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று எட்டாவது நாளாக ஒளிபரப்பப்பட உள்ளது. ஒவ்வொரு நாளின் புரோமோ வீடியோக்களும் அன்றைய எபிசோடுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.
இன்றைய முதல் புரோமோ வீடியோவில், ஆண்கள் அணிக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் தொடர்பாக அவர்கள் எடுத்த முடிவுகள் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், பெண்கள் அணி சமையல் வேலைகளை பிரித்து கொள்ள முற்படுவதை காணலாம்.
"சமையல் வேலைக்கு ஆண்கள் அணி, பெண்கள் அணிகளில் எத்தனை பேரை தேர்வு செய்கிறீர்கள்?" என்று பிக் பாஸ், கேட்க, அதற்கு ஆண்கள் அணி ஜாக்லின் மற்றும் சாச்சனா என தேர்வு செய்கின்றனர்.
"சமைப்பது வாரம் முழுவதும் இரண்டே பேர். ஆனால் அவர்கள் பாத்திரம் மட்டும் கழுவுவார்கள்" என்று ஜாக்குலின் கேள்வி கேட்கிறார். "ஒரு வாரம் முழுவதும் நாங்கள் ரெண்டு பேர் மட்டும் எப்படி சமைக்க முடியும்? இதைப் பற்றி யோசியுங்கள்," என ஜாக்குலின் சொல்கிறார்.
அதற்கு முத்துக்குமரன், "யோசித்துப் பார்த்து தான் இதை கொடுத்திருக்கிறோம்" என்று பதிலளிக்க, "அவர்கள் வேண்டுமென்றே செய்கிறார்கள் என ஜாக்ஜ்ய்லின் கூறுகிறார்.
அதற்கு ஜாக்லின் ’தாய்க்குலங்களை நான் மதிக்கிறேன் என்று சொல்றார் அல்லவா, அப்படி சொல்லாதீங்க என ஆவேசத்துடன் கூறும் காட்சிகளுடன் இன்றைய இரண்டாவது புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது. மொத்தத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டாஸ்கில் ஆண்கள் பெண்கள் அணி மோதல் போக்கை கடைபிடித்து வருவது நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரித்து வருவதாக தெரிகிறது
#Day9 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 15, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/oAq8EQttap
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout