சிபிராஜின் 'ஜாக்சன் துரை' ஆடியோ வெளியீடு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Sunday,February 28 2016]

சிபிராஜ் நடித்த 'நாய்கள் ஜாக்கிரதை' திரைப்படம் வெற்றி பெற்றதால் மீண்டும் வெற்றியுடன் ரீஎண்ட்ரி ஆகியுள்ள சிபிராஜ் அதே உற்சாகத்தில் நடித்து வரும் படம் 'ஜாக்சன் துரை'. கோலிவுட்டில் பேய்ப்பட சீசன் இன்னும் முடியாத நிலையில் அடுத்து வரும் பேய்படமாக கருதப்படும் இந்த படத்தில் சத்யராஜூம், மொட்டை ராஜேந்திரனும் பேயாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. வரும் மார்ச் மாதம் 16ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் இசை வெளியீட்டு தேதியுடன் கூடிய போஸ்டர் ஒன்றும் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

தரணீதரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சித்தார்த் விபின் இசையமமைத்துள்ளார். சிபிராஜ், சத்யராஜ், பிந்துமாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவராஜ் ஒளிப்பதிவும், விவேக் ஹர்சன் படத்தொகுப்பும் செய்துள்ளனர்.