கொரோனா வைரஸ் குறித்த ஜாக்கிசானின் விழிப்புணர்வு வீடியோ!

கொரோனா வைரஸ் அபாயம் குறித்து உலகம் முழுவதும் உள்ள திரை உலக பிரபலங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் அவர்களும் இது குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியபோது ’கொரோனா வைரஸ் மிகவும் அபாயகரமானது என்றும் எனவே அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருங்கள் என்றும் அரசு கூறும் அறிவுறுத்தலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்

மேலும் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என்றும் அது உங்களையும் உங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், பத்திரமாக இருங்கள், உங்கள் அனைவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது என்றும் ஜாக்கிசான் அந்த வீடியோவில் கூறியுள்ளார். ஜாக்கிசானின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

More News

மதுவுக்கு பதில் சேவிங் லோஷனை குடித்த இருவர் பரிதாப பலி!

கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாப்பதை விட மதுவுக்கு அடிமையானவர்களை பாதுகாப்பது அரசுக்கு பெரும் சவாலாக இருக்கும் போல் தெரிகிறது. ஊரடங்கு உத்தரவு காரணமாக

அதிகம் எதிர்பார்த்தேன், ஆனால் டார்ச்சுக்கே இன்றுதான் வருகிறார்: கமல்ஹாசன்

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை நாட்டு மக்களிடம் பேசியபோது வரும் ஞாயிறு அன்று இரவு 9 மணிக்கு அனைவரும் வீட்டில் உள்ள விளக்கை அணைத்துவிட்டு

மருத்துவர்கள், நர்ஸ்களுக்காக திறக்கப்பட்ட தாஜ் ஓட்டல்கள்: குவியும் பாராட்டுக்கள்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும், இதனால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்

லவ் பண்ணுங்க, ஆனா பேபி வேணாம்: பிரபல பாடகரின் மகள் கிண்டல்

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 10 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கானோர் முதல் முறையாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர் 

கூட்டமாக தொழுகை நடத்த அனுமதிக்காததால் ஆத்திரம்: போலீசாரை தாக்கிய 40 பேர் மீது வழக்கு

கர்நாடகாவின் மங்களூரு மற்றும் ஹூப்ளி பகுதிகளில் கூட்டம் கூடி தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் ஆத்திரம் அடைந்த கூட்டத்தினர் கடுமையாக தாக்கியதில் 4 போலீசார் படுகாயம்