சக நடிகர்களுக்கு ஜாக்கிசான் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

  • IndiaGlitz, [Thursday,March 22 2018]

ஆசியாவின் சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ஜாக்கிசான் நடித்த 'குங்பூ யோகா' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் அந்த படத்தில் பணிபுரிந்த முக்கிய நடிகர்களுக்கும் மேலும் தனக்கு நெருக்கமானவர்களுக்கும் ஜாக்கி சான் பரிசு ஒன்றை அனுப்பியுள்ளார். அதுதான் மிகவும் குறைந்த அளவே தயாரிக்கப்பட்ட அபூர்வமான சர்ட்ஜாக்கெட்,. இந்த பரிசை பெற்றவர்களில் ஒருவர் பாலிவுட் நடிகர் சோனு சூத் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பரிசுடன் ஜாக்கிசான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது:

JC ஸ்டண்ட் டீமீன் 40வது ஆண்டுவிழாவை அடுத்து தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் சர்ட்ஜாக்கெட் இது. மிகச்சிறந்த லெதர் கொண்டு மிகச்சிறந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான இந்த சர்ட்ஜாக்கெட், மிகவும் கவனத்துடன் கலை நுணுக்கத்துடன் தயாரிக்கப்பட்டது. இந்த பரிசின் மதிப்பு குறித்து நான் கூற விரும்பவில்லை. ஆனால் இந்த பரிசு பல எண்ணங்களையும் நினைவுகளையும் ஞாபகப்படுத்தும். இந்த பரிசை எனக்கு மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டும் அனுப்பியுள்ளேன். இது குளிர்காலத்திற்கு உதவும் என்று நினைக்கின்றேன். இந்த சர்ட்ஜாக்கெட்டை பார்க்கும்போது நீங்கள் என்னை நினைவுகொள்வீர்கள், அணியும்போது என்னை கட்டிப்பிடித்தது போல் உணர்வீர்கள்' என்று ஜாக்கிசான் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.                                     

More News

சிவகார்த்திகேயன் படத்திற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் நடிகைகள்

ரஜினியின் 'கபாலி' படத்தில் இடம்பெற்ற 'நெருப்புடா' பாடல் மூலம் பெரும்புகழ் பெற்ற அருண்காமராஜ், முதன்முதலில் இயக்கும் படம் ஒன்றை சிவகார்த்திகேயன் தயாரிக்கின்றார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

நான் வந்துட்டேன்னு சொல்லு: தமிழில் டுவீட் போட்ட பிரபல சிஎஸ்கே வீரர்

இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாட வந்துவிட்டால், தமிழ் ரசிகர்களின் பாசமழைக்கு பஞ்சமே இருக்காது என்பது தெரிந்ததே. இதற்கு நல்ல உதாரணம் தல தோனி

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படம்

ஜிவி பிரகாஷ் நடித்து வந்த குப்பத்து ராஜா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அவர் நடித்து வந்த 'சர்வம் தாள மையம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது

சென்னையில் தற்கொலைக்குக் முயன்ற இரண்டு காவலர்கள் கைது

நேற்று சென்னையில் டிஜிபி அலுவலகம் எதிரே ரகு, கணேஷ் ஆகிய இரண்டு ஆயுதப்படை காவலர்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்

ரஜினி பள்ளியில் மகளை படிக்க வைத்த கமல் டிரைவர்

கமல்ஹாசனிடம் சுமார் 12 வருடங்கள் டிரைவராக பணிபுரிந்த ஆனந்த் அளித்துள்ள பேட்டியில் கமல்ஹாசனின் குணம், கவுதமியிடம் அவர் காட்டிய அன்பு, தனக்கு செய்த உதவி உள்பட பல விஷயங்களை மனம் திறந்து கூறியுள்ளார்