ரஜினியை விட 3 வயது கம்மிதான்.. ஆனால் எப்படி இருக்காரு பாருங்க.. ஜாக்கிசான் லேட்டஸ்ட் புகைப்படம்..!

  • IndiaGlitz, [Saturday,March 16 2024]

90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்துக்குரிய நடிகர் என்றால் ஜாக்கிசான் என்று பலர் கூறுவார்கள், அந்த அளவுக்கு அவரது ஆக்சன் படங்கள் இந்தியா முழுவதும் பிரபலமானது என்பது தெரிந்தது

ஜாக்கிசானின் பல திரைப்படங்கள் தமிழில் டப் ஆகி சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் அவருடைய படங்கள் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவரது படத்தை ரிலீஸ் செய்ய விநியோகஸ்தர்கள் போட்டி போடுவது உண்டு என்பதும் திரையரங்கு உரிமையாளர்களும் ஜாக்கிசான் படங்களால் பெரும் லாபம் பெற்றனர் என்பது பலர் அறிந்ததே.

அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் விருப்பத்துக்குரிய நடிகராக இருந்த ஜாக்கிசானின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளதை அடுத்து அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஜாக்கிசானுக்கு தற்போது 70 வயதாகும் நிலையில் அவர் தள்ளாடிய நிலையில் உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் தான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம்

ஜாக்கிசானை விட ரஜினிக்கு மூன்று வயது அதிகமாக இருந்தாலும் அவர் இன்னும் இளமையான தோற்றத்தில் சுறுசுறுப்பாக காணப்படும் நிலையில் ஜாக்கிசானின் தள்ளாடிய தோற்றத்தை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

புரூஸ்லீக்கு பிறகு உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட ஜாக்கிசான், முதலில் சீன படங்களில் மட்டும் நடித்து வந்தாலும் அதன்பின் ஹாலிவுட்டில் சில படங்கள் நடித்து உலக சூப்பர் ஸ்டார் ஆக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் அவருடைய வயதான தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் வருத்தத்துடன் தங்கள் கமெண்ட்ஸை பதிவு செய்து வருகின்றனர்.