பிளாட்பாரத்தில் வசிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகரின் மகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆசிய சூப்பர் ஸ்டார் என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் ஜாக்கிசான் தான். ரூ.395 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சொந்தமான இவருடைய மகள் எட்டா சோக்லாம் தங்குவதற்கு இடமின்றி தோழியுடன் பிளாட்பாரத்தில் வசித்து வருகிறார்.
இதுகுறித்து ஜாக்கிசான் மகள் எட்டா சோக்லாம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நானும் என் தோழி ஆன்டி ஆன்டும் ஓரினச்சேர்க்கையாளர்கள். எங்களிடம் செலவுக்கு பணம் இல்லை, தங்க இடமும் இல்லை. இதனால் நாங்கள் ஹாங்காங் நகரில் கஷ்டப்படுகிறோம். வீடு இல்லாமல் தெரு ஓரத்தில், பாலத்தின் அடியில் எல்லாம் தூங்கி நாட்களை கழித்து வருகிறோம். தயவு செய்து யாராவது எங்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்து உதவி செய்யுங்கள்.
எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது புனிதமான அன்பு. பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் உதவி கேட்டும் யாரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. என் தந்தை 395 அமெரிக்க மில்லியன் டாலர்களுக்கு சொந்தகாரராக இருந்தும் அவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை' என்று கூறியுள்ளார்.
ஜாக்கி சானுக்கும் ஆசிய அழகி பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுக்கும் பிறந்தவர் தான் எட்டா சோக்லாம் என்பதும் இந்த ரகசிய உறவை ஜாக்கிசான் நீண்ட மெளனத்திற்கு பின்னர் சமீபத்தில் தான் வெளியில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments