பிளாட்பாரத்தில் வசிக்கும் சூப்பர் ஸ்டார் நடிகரின் மகள்

  • IndiaGlitz, [Wednesday,May 02 2018]

ஆசிய சூப்பர் ஸ்டார் என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் ஜாக்கிசான் தான். ரூ.395 மில்லியன் அமெரிக்க டாலருக்கு சொந்தமான இவருடைய மகள் எட்டா சோக்லாம் தங்குவதற்கு இடமின்றி தோழியுடன் பிளாட்பாரத்தில் வசித்து வருகிறார். 

இதுகுறித்து ஜாக்கிசான் மகள் எட்டா சோக்லாம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நானும் என் தோழி ஆன்டி ஆன்டும் ஓரினச்சேர்க்கையாளர்கள். எங்களிடம் செலவுக்கு பணம் இல்லை, தங்க  இடமும் இல்லை. இதனால் நாங்கள் ஹாங்காங் நகரில் கஷ்டப்படுகிறோம். வீடு இல்லாமல் தெரு ஓரத்தில், பாலத்தின் அடியில் எல்லாம் தூங்கி நாட்களை கழித்து வருகிறோம். தயவு செய்து யாராவது எங்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்து உதவி செய்யுங்கள்.

எங்கள் இருவருக்கும் இடையே இருப்பது புனிதமான அன்பு. பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் உதவி கேட்டும் யாரும் எங்களுக்கு உதவ முன்வரவில்லை. என் தந்தை 395 அமெரிக்க மில்லியன் டாலர்களுக்கு சொந்தகாரராக இருந்தும் அவரும் எங்களை கண்டுகொள்ளவில்லை' என்று கூறியுள்ளார். 

ஜாக்கி சானுக்கும் ஆசிய அழகி பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுக்கும் பிறந்தவர் தான் எட்டா சோக்லாம் என்பதும் இந்த ரகசிய உறவை ஜாக்கிசான் நீண்ட மெளனத்திற்கு பின்னர் சமீபத்தில் தான் வெளியில் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அன்னை இல்லத்தில் இணைந்த அஜித்-விஜய் ரசிகர்கள்

சமூக வலைத்தளங்களில் அஜித்-விஜய் ரசிகர்கள் மோதிக்கொள்வது மட்டும்தான் பலருக்கு தெரியும். ஆனால் அஜித் பிறந்தநாளை விஜய் ரசிகர்களும் கொண்டாடுவது, அதேபோல் விஜய் பிறந்தநாளை அஜித் ரசிகர்களும் கொண்டாடுவது

அமெரிக்காவில் நடனத்தில் இணைந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி

அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் இசை திருவிழாதான் Coachella என்ற இசை நிகழ்ச்சி. இந்த ஆண்டும் இந்த விழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நெட்டிசன்கள் அர்ச்சனை எதிரொலி: முதல்வரின் அர்ச்சனை விளம்பரம் நீக்கம்

நெட்டிசன்கள் இணையதளங்களில் தொடர்ந்து பதிவு செய்த அர்ச்சனைகள் காரணமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அர்ச்சனை செய்யும் விளம்பரம் நீக்கப்பட்டுள்ளது.

அஜித்தின் சிறப்பு வாய்ந்த ஸ்பெஷல் திரைப்படங்கள்

தல அஜித் என்ற இந்த ஒற்றை வார்த்தை தான் அஜித் ரசிகர்களுக்கு தாரக மந்திரம். அஜித்த

நள்ளிரவில் சென்னையை வலம் வந்த 'தளபதி 62' குழுவினர்

விஜய் நடித்து வரும் 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட விஜய் மற்றும் 100 மாணவர்கள் இரவில் சென்னையை பைக்கில் செல்லும் காட்சி படமாக்கப்பட்டது.