ஜானுவுக்கு பாட்டு சொல்லி கொடுத்த ஜானகி: 96 படத்தில் இடம்பெறாத அற்புதமான காட்சி

  • IndiaGlitz, [Tuesday,November 27 2018]

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சமீபத்தில் வெளியான '96' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தை பாராட்டாதவர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைவரின் பாராட்டுக்களை பெற்றது இந்த படம்.

குறிப்பாக இந்த படத்தில் 'ஜானு' கேரக்டரில் நடித்த த்ரிஷா பாராட்டு மழையில் நனைந்தார். அனேகமாக அவர் நடித்த கேரக்டர்களில் இந்த கேரக்டர் பெஸ்ட் என்றும் சொல்லலாம். மேலும் இந்த படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் நல்ல பாடகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் இரவில் விஜய்சேதுபதியும், த்ரிஷாவும் சென்னையில் சாலை ஒன்றில் நடந்து செல்லும்போது ஜானகியின் வீட்டை விஜய்சேதுபதி த்ரிஷாவிடம் காண்பிப்பார். அப்போது தற்செயலாக ஜானகியே அங்கு வந்து இருவரையும் வீட்டுக்கு அழைத்து சென்று அவர்களை பற்றி விசாரிப்பார்.

அப்போது 'ஜானு' தனது பாடலை அற்புதமாக பாடுவதை கேள்விப்பட்டு அவரை பாட சொல்ல, ஜானுவும் பாடுகிறார். அதில் சில திருத்தங்களை கூறி இப்படி பாடினால் நன்றாக இருக்கும் என ஜானகி அட்வைஸ் செய்ய அதன்படி திருத்தி ஜானு பாடுவதாக ஒரு காட்சி உள்ளது. படத்தில் இடம்பெறாத இந்த காட்சி தற்போது இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவ்வளவு அருமையான காட்சியை படத்தில் ஏன் இடம்பெற செய்யவில்லை என்று பலர் படத்தின் இயக்குனரை ரசிகர்கள் செல்லமாக கண்டித்து வருகின்றனர்.

More News

'2.0' திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய வேண்டும்: திடீர் மனுவால் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. உலகம் முழுவதும் திரையரங்குகளில் முன்பதிவும் தொடங்கப்பட்டு

ஏ.ஆர்.முருகதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்: நீதிமன்றத்தில் அரசு தரப்பு வாதம்

சமீபத்தில் வெளியான தளபதி விஜய்யின் 'சர்கார்' திரைப்படம் பெரும் சர்ச்சைக்களுக்கு இடையே வெளிவந்து வெற்றி பெற்றது,. இந்த படத்தில் அரசின் இலவச திட்டங்கள் அவமரியாதை செய்யப்படுவதாக

'மாரி 2 'ரெளடி பேபி பாடலை எழுதியதும் பாடியதும் யார் தெரியுமா?

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் வரும் டிசம்பரில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்சிங்கிள் பாடலான 'ரெளடி பேபி பாடல்

சபரிமலையில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல மாடல் அழகி கைது

சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த தீர்ப்பை தவறா

'சர்கார்' இடத்தை பிடிக்க 'பேட்ட' முயற்சியா?

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இடத்தை பிடிக்க தளபதி விஜய் நெருங்கிவிட்டார் என்பது தெரிந்ததே. ஆனால் விஜய்யின் 'சர்கார்' இடத்தை ரஜினியின் 'பேட்ட' பிடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.