குயின், தலைவி திரைப்படங்கள்: தீபா தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவு

  • IndiaGlitz, [Wednesday,December 11 2019]

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ’தலைவி’ என்ற டைட்டிலில் இயக்குனர் விஜய் திரைப்படமாகவும், ‘குயீன் என்ற டைட்டிலில் இயக்குனர் கௌதம் மேனன் இணையதள தொடராகவும் இயக்கி வருகின்றனர்

இந்த நிலையில் இந்த திரைப்படங்களுக்கு எதிராக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றபோது இயக்குனர் விஜய் தரப்பில் கூறப்பட்டதாவது: ஜெயலலிதாவின் சட்டபூர்வமான வாரிசு ஜெ தீபா தான் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் ஏற்கனவே வெளிவந்த புத்தகத்தை தழுவி திரைப்படம் எடுக்கப்பட்டு வருவதாகவும், பல ஆண்டுகளாக புழக்கத்திலுள்ள புத்தகத்துக்கு இதுவரை தடை விதிக்கப்படவிலை என்றும் வாதம் செய்யப்பட்டது, மேலும் ’தலைவி’ படத்தை பார்க்க வேண்டுமானால் ரூபாய் 200 கொடுத்து ஜெ தீபா முதல் நாளிலேயே பார்க்கலாம் என்றும் அவரது தரப்பில் கூறப்பட்டுள்ளது

அதேபோல் இயக்குனர் கௌதம் மேனன் தரப்பிலிருந்து ‘குயின்’ என்ற புத்தகத்தை தழுவி இணையதள தொடர் எடுக்கப்பட்டு வருவதாகவும், 2018ல் இணையதள தொடர் பற்றிய அறிவிப்பு வெளியிட்டு தயாரிக்க ரூபாய் 25 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும், கடைசி நேரத்தில் தீபா வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது இந்த இருவரின் வாதங்களுக்கு பின்னர் தீர்ப்பு தேதியை சென்னை ஐகோர்ட் ஒத்தி வைத்துள்ளது

More News

இதுவரை கைலாசாவிற்கு விண்ணப்பித்திருப்பவர்கள் இவ்வளவு பேரா..!

12 லட்சம் பேருக்கு மேல் கைலாஷாவிற்கு விண்ணப்பித்துள்ளார்கள் என நித்தியானந்தா தனது வீடியோவில் கூறியுள்ளார்

திருமணமான 4வது நாளே வாந்தி எடுத்த மணப்பெண்: 2 மாத கர்ப்பம் என தெரிந்ததால் மாப்பிள்ளை அதிர்ச்சி

திருமணம் ஆன நான்காவது நாளே தனது புது மனைவி இரண்டு மாத கர்ப்பம் எனத் தெரிந்து வாலிபர் ஒருவர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் பொள்ளாச்சி அருகே நடந்துள்ளது 

"வரணும்..பழைய பன்னீர் செல்வமா வரணும்" STR ரசிகர்கள் பகிரும் வீடியோ

சிம்பு குத்துச்சண்டை பயிற்சி பெறுவது போன்ற வீடியோ ஒன்று அவரது ரசிகர்களால் வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது...

வெங்காயம் இறக்குமதி பண்ணியாச்சு..ஆனால் பருப்பு விலை உயர்ந்திருச்சே..!

வெங்காயத்தைத் தொடர்ந்து பருப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளது. மற்ற மாநிலங்களில் இருந்து பருப்பு வரத்து குறைவு காரணமாக வரலாறு காணாத வகையில் பருப்பு விலைகள் உயர்ந்துள்ளன

கமல்ஹாசனை சந்தித்த பிரபல மே.இ.தீவுகள் கிரிக்கெட் வீரர்!

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 தொடரில் இந்தியாவும், 2-வது டி20