20 சிவாச்சாரியார்களின் ஆசியுடன் நடந்த நயன் திருமணம்: ஐயர் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமணம் இன்று நடந்த நிலையில் இந்த திருமணத்தை நடத்தி வைத்த ஐயர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
நயன்தாரா திருமணத்திற்கு 20 சிவாச்சாரியார்கள் வந்திருந்ததாகவும் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி பொருத்தம் மிகவும் பொருத்தமாக இருந்ததாகவும் திருமணத்தை நடத்தி வைத்த ஐயர் கூறியுள்ளார்.
திருத்தணி, வடபழனி, மயிலாப்பூர், காளிகாம்பாள் கோயில் உள்பட பல இடங்களில் இருந்து சிவாச்சாரியார்கள் வந்திருந்தார்கள் என்றும், அவர்கள் முன்னிலையில் நல்ல முன்னேற்பாடுடன் ஒரு குறையும் இல்லாமல் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்றும் ஐயர் தெரிவித்தார்.
மேலும் இன்று காலை 8 மணிக்கு முறைப்படி அனைத்து பூஜைகளும் ஆரம்பமாகி மந்திரம் உச்சரித்து, திருமுறை பாராயணம் செய்து, மேளதாளத்துடன் இந்து முறைப்படி திருமணம் நடந்தது என்று திருமணம் செய்து வைத்த ஐயர் கூறினார்.
ரஜினிகாந்த், ஷாருக்கான், சரத்குமார் உட்பட பல திரையுலக பிரமுகர்கள் வந்திருந்தார்கள் என்றும், திருமணம் செய்து வைத்த எங்களுக்கும், சிவாச்சாரியார்களுக்கும் மிகுந்த மரியாதை கொடுத்தார்கள் என்றும், எங்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை என்று கூறினார்.
மேலும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி மிகவும் பொருத்தமாக இருந்தது என்றும் அவர்கள் ஆனந்தமாக வாழ்வார்கள் என்றும் அவர் கூறினார்.
1st கிளாஸ் பொருத்தம்..நயன் - விக்கி ஜோடி..திருமணத்தை நடத்திய ஐயர் பேட்டி#nayantharavigneshshivan #vigneshshivan #nayanthara #tamilcinema pic.twitter.com/O9nuXsie8M
— ABP Nadu (@abpnadu) June 9, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments