close
Choose your channels

ஐங்கரனின் அடுத்த படத்தில் இணையும் 2 வெற்றி இயக்குனர்கள்

Tuesday, February 16, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்' என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்து தனது மூன்றாவது படத்தில் மற்றொரு வெற்றிப்பட இயக்குனரான ராகவா லாரன்ஸ் உடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


ஐங்கரன் இண்டர்நேஷனல் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கும் பொறுப்பை ஏற்றுள்ள பொன்ராம், தன்னுடைய கதைக்கு ராகவா லாரன்ஸ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என கருதி, அவரிடம் கதையை கூறியதாகவும், ராகவா லாரன்ஸுக்கு பொன்ராம் கூறிய கதை பிடித்துவிட்டதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே ராகவா லாரன்ஸ், 'மொட்டசிவா கெட்டசிவா' மற்றும் 'பைரவா' ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் பொன்ராம் இயக்கத்திலும் அவர் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்ராம், ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரும் இணையும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment