இந்த இயக்குனர் என் படத்தை பாராட்ட வேண்டும்: இளம் இயக்குனர் குறித்து பாரதிராஜா

இந்த இளம் இயக்குனர் என்னைப் பாராட்டும் அளவுக்கு ஒரு திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்று எனக்கு ஆசை என இயக்குனர் இமயம் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் இமயம் பாரதிராஜா தமிழ் திரையுலகில் பல வருடங்கள் இருந்தவர்கள் இவரது படங்கள் பல்வேறு சாதனைகளை செய்து உள்ளது என்பதும் தெரிந்ததே. அவரது திரைப்படங்கள் தற்போது அறிமுகமாகும் இளம் இயக்குனர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது.

ஆனால் சமீபத்தில் பேட்டியளித்த இயக்குனர் இமயம் பாரதிராஜா, ‘இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்னை பாராட்டும் வகையில் ஒரு திரைப்படம் எடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசை என்று கூறியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. லோகேஷ் கனகராஜூக்கு போட்டி போட்டுக் கொண்டு ஒரு படமெடுக்க வேண்டும் என்று எனக்கு ஆசையாக உள்ளது என்றும் இயக்குனர் லோகேஷ் என்னை பாராட்டும் அளவிற்கு ஒரு படம் இயக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’விக்ரம்’ திரைப்படம் தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்திய திரையுலகில் மிகப் பெரிய சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது. அதுமட்டுமின்றி லோகேஷ் கனகராஜ் இயக்கிய முந்தைய படங்களான மாஸ்டர், கைதி மற்றும் மெட்ரோ ஆகிய படங்களும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.