close
Choose your channels

இவாங்கா ட்ரம்ப்புடன் ஜோடி சேர்ந்த இந்திய இளைஞர்கள்- மீம்ஸ் கிரியேட்டர்களின் சேட்டை

Tuesday, March 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிபர் ட்ரம்ப்பின் இந்திய பயணம் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மிகப் பெரிய கொண்டாட்டமாக அமைந்தது என்றே சொல்லலாம். முதலில் பாகுபலி வீரராக வலம் வந்த ட்ரம்ப் பின்பு பாஜிராவ் மஸ்தானி படத்தில் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடி இணைய தளத்தை கலக்கி இருந்தார். மார்ப்பிங் செய்து தன்னை காட்டிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அதிபர் ட்ரம்ப்பும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார் என்பது தான் உச்ச பட்சம்.

அதிபரின் மனைவி மெலானியாவையும் விட்டு வைக்காமல் பாகுபலி படத்தில் சித்தரித்து இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத் தக்கது. தற்போது அதிபரின் மகள் இவாங்காவையும் மீம்ஸ் கிரியேட்டர்கள் இணையத்தில் அலற விட்டு இருக்கிறார்கள்.

கடந்த 25 ஆம் தேதி மாலை அமெரிக்க அதிபருடன் அவரது மகள் இவாங்காவும் தாஜ்மகாலை சுற்றிப் பார்த்து புகைப்படங்களை எடுத்துக் கொண்டார். அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார் இவாங்கா. தாஜ்மகால் அழகில் திளைத்த இவாங்காவின் புகைப்படங்களை பார்த்த நமது இளைஞர்கள், தாஜ்மகாலை கத்தரித்து தூக்கி விட்டு இவாங்காவை மட்டும் தன்னுடன் ஜோடி சேர்த்து ட்டிவிட்டரில் வெளியிட்டனர்.

இப்படி போட்டோஷாப், எட்டிட் செய்யப் பட்ட புகைப்படங்களை பார்த்த இவாங்கா அதிர்ந்து போவார் என்று நினைத்தால் அதை லைக் செய்திருக்கிறார். மேலும், அந்தப் புகைப்படங்களை டிவிட்டர் பக்கத்தில் இருந்து பகிர்ந்து இருக்கிறார்.

“ரிப்ளை வரும் வரைதான் நம்ம பசங்க சும்மா இருப்பாங்க” என்று சொல்வது மாதிரி இவாங்காவின் டிவிட்டர் பக்கத்தை தற்போது மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களுக்கான திருவிழாக் களமாகவே மாற்றி விட்டார்கள். இவாங்காவுடன் தான் இருப்பது போன்ற புகைப்படங்களை பகிர்ந்து கொள்வதும் அவர் அதற்கு ரிப்ளை செய்வதுமாக அமெரிக்கா திரும்பிய நிலையிலும் ட்ரம்ப்பின் குடும்பம் இணையத்தில் கலக்கி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment