தயாரிப்பாளர் சங்கத்தை பிடித்த விஷாலால் ஆர்கே நகரை பிடிக்க முடியாதா? : ஆர்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஷால் நடிகர் சங்க தேர்தல் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஜெயிக்க முடிந்தபோது ஆர்கே நகர் தேர்தலில் ஜெயிக்க முடியாதா? என்று ஆர்யா நகைச்சுவையுடன் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான 'நம்ம அணி' வெற்றி பெற்றது குறித்து ஆர்யா கூறியதாவது: தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் வெற்றி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. திருட்டு விசிடி தான் இங்கு மிகப்பெரிய பிரச்னையாக இருக்கின்றது. ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இந்த பிரச்னை இல்லை. அதோடு இங்கு தான் சமூக வலைத்தளங்கள், இணையதளங்களில் கூட படங்கள் வெளியாகின்றன. இதை தடுக்க இதுவரை யாரும் தைரியமாக நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் இப்போது இந்த நிலை மாறிவிட்டது. திருட்டு விசிடியை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுப்போம். தயாரிப்பாளர் சங்க தேர்தலும், ஆர்கே நகர் தேர்தலும் அருகருகே வந்ததால், இடைத்தேர்தலில் போட்டியிட முடியவில்லை. இல்லையெனில் அங்கேயும் ஒரு கூட்டணி போட்டு ஜெய்ச்சிருப்போம். மச்சான் கொஞ்சம் நேரம் இருந்தா ஆர்கே நகரில் போட்டியிலாமா என விஷாலிடம் கிண்டலாகவும் கேட்டுள்ளேன்.
விஷால் நடிக்க வந்த போது, நடிகர் சங்கத்துக்கு வருவார், அடுத்து தயாரிப்பாளர் சங்கத்துக்கு வருவார் என யாரும் யோசிக்கவில்லை. ஆனால் தற்போது அவரின் உயர்வு அனைவருக்கும் தெரியும். அமைதியாக இருந்தால் எந்த காரியமும் செய்ய முடியாது
இவ்வாறு ஆர்யா கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments