தேசிய விருதில் பாகுபாடு என்பது எனது கருத்து மட்டுமல்ல. ஏ.ஆர்.முருகதாஸ்
- IndiaGlitz, [Friday,April 14 2017]
சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. குறிப்பாக அமீர்கானின் 'டங்கல்' படத்திற்கு விருது கிடைக்காதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது சமூக வலைத்தளத்தில் 'தேசிய விருதுகள் தேர்வில் தேர்வுக்குழு பாரபட்சமாக செயல்பட்டதாகவும், சிபாரிசின் பேரில் தேர்வுக்குழு நடுவர்கள் தேசிய விருது அறிவித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தேர்வுக்குழு தலைவர் பிரியதர்ஷன், 'விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை என்றும், அமீர்கானின் 'டங்கல்' படத்தில் எந்த சமூக கருத்தும் இல்லை என்றும் அதனால் தேர்வுக்குழுவினர் அந்த படத்திற்கு விருது அளிக்க முன்வரவில்லை என்றும் கூறினார். அதுமட்டுமின்றி ஏற்கனவே அவருக்கு வேறு ஒரு படத்திற்கு தேசிய விருது அறிவித்தபோது அவர் அதை பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டதாகவும் விளக்கம் அளித்தார்
இந்த நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ''தேசிய விருதில் பாகுபாடு காட்டப்பட்டது என்பது எனது கருத்தல்ல என்றும் அது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் கருத்து என்றும் தேசிய விருது தொடர்பாக என்னிடம் விவாதம் செய்வதை விடுத்து உண்மையை கூறுங்கள் என்றும் ஏ.ஆர்.முருகதாஸ் பதிவு செய்துள்ளார்.