சபாஷ்… இந்தியாவுல… அதுவும் இந்த இடத்துல கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பது ஆச்சர்யம்தான்!!! WHO பாராட்டு!!!
- IndiaGlitz, [Saturday,July 11 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பிட்ட 8 மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் 95 விழுக்காடு பாதிப்பு அந்த மாநிலங்களில் மட்டுமே ஏற்பட்டு இருக்கிறது என்றும் மத்திய அரசு நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் இந்தியாவிலேயே அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதியில் உலகிலேயே பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் நோய்த்தொற்று ஏற்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதைக் குறித்து இந்தியாவில் தொடர்ந்து அச்சம் எழுப்பப் பட்டு வந்தது.
இந்நிலையில் தாராவில் நோய் பாதிப்பு குறைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும் தாராவில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தியிருப்பது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்து இந்தியாவிற்கு பாராட்டையும் தெரிவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பக் கட்டத்தில் தாராவியைக் குறித்து பலரும் அச்சம் தெரிவித்து வந்த நிலையில் அம்மாநில சுகாதாரத் துறை சார்பாக நோய்த் தடுப்பிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்பட்டன. செய்யப்பட்டதைத் தொடர்ந்து அம்மருந்து கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது.
தற்போது மாநில அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் நோய் பரவல் குறைந்து இருப்பதாக மத்திய அரசும் பாராட்டு தெரிவித்து இருக்கிறது. இந்தியா கொரோனா வைரஸ் பரவலில் உலக அளவில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. மேலும் நோய் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியிருக்கிறது. 22,144 உயிரிழப்பு நிகழ்நது இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
In Vietnam,Cambodia,Thailand, New Zealand, Italy, Spain, South Korea&even in Dharavi, a densely packed area in Mumbai, strong focus on community engagement&basics of testing, tracing, isolating&treating the sick is key to breaking chains of transmission&suppressing the virus: WHO pic.twitter.com/CaliMES9w2
— ANI (@ANI) July 10, 2020