சபாஷ்… இந்தியாவுல… அதுவும் இந்த இடத்துல கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பது ஆச்சர்யம்தான்!!! WHO பாராட்டு!!!

  • IndiaGlitz, [Saturday,July 11 2020]

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பிட்ட 8 மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதாகவும் 95 விழுக்காடு பாதிப்பு அந்த மாநிலங்களில் மட்டுமே ஏற்பட்டு இருக்கிறது என்றும் மத்திய அரசு நேற்று அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் இந்தியாவிலேயே அதிகம் பாதித்த மாநிலமாக மகாராஷ்டிரா இருந்து வருகிறது. இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை பகுதியில் உலகிலேயே பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் நோய்த்தொற்று ஏற்பட்டால் நிலைமை என்னவாகும் என்பதைக் குறித்து இந்தியாவில் தொடர்ந்து  அச்சம் எழுப்பப் பட்டு வந்தது.

இந்நிலையில் தாராவில் நோய் பாதிப்பு குறைந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. மேலும் தாராவில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தியிருப்பது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்து இந்தியாவிற்கு பாராட்டையும் தெரிவித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரம்பக் கட்டத்தில் தாராவியைக் குறித்து பலரும் அச்சம் தெரிவித்து வந்த நிலையில் அம்மாநில சுகாதாரத் துறை சார்பாக நோய்த் தடுப்பிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் வழங்கப்பட்டன. செய்யப்பட்டதைத் தொடர்ந்து அம்மருந்து கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது.

தற்போது மாநில அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால் நோய் பரவல் குறைந்து இருப்பதாக மத்திய அரசும் பாராட்டு தெரிவித்து இருக்கிறது. இந்தியா கொரோனா வைரஸ் பரவலில் உலக அளவில் 3 ஆம் இடத்திற்கு முன்னேறியிருக்கிறது. மேலும் நோய் பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியிருக்கிறது. 22,144 உயிரிழப்பு நிகழ்நது இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அவர் என் அண்ணன் போன்றவர்: பாலியல் புகார் கொடுத்த சென்னை கல்லூரி மாணவி திடீர் பல்டி

சென்னை மாநகராட்சியில் பொறியாளராக பணி செய்துவரும் கமலக்கண்ணன் என்பவர் தன்னிடம் பாலியல் தொல்லை செய்வதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும்

ஆர்யாவின் 'டெடி' ஓடிடியில் ரிலீஸா?

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தினால் சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு உள்ளது

கைகால்களை கட்டிப்போட்டு நள்ளிரவில் திருமணம்: 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை

நள்ளிரவில் 15 வயது சிறுமியின் கை கால்களை கட்டிப்போட்டு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களே கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம் வேலூர் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளினார் முகேஷ் அம்பானி: 

உலக கோடீஸ்வரர் பட்டியலில் 9 வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி 8வது இடத்தில் இருந்த வாரன் பஃபெட்டை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

சிபிசிஐடியின் முக்கிய அறிக்கை: சாத்தான்குளம் வீடியோவை டெலிட் செய்த சுசித்ரா

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தந்தை மகன் காவல் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே.