இளையதளபதியின் 'விஜய் 61' படத்தின் இசையமைப்பாளர் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. 'பைரவா' படத்திற்கு பின்னர் இன்னும் வேறு பெரிய படங்கள் வெளிவராததால் இந்த படத்தின் வசூல் ஓரளவுக்கு திருப்திகரமாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விஜய் நடிக்கவுள்ள அடுத்தபடமான 'விஜய் 61' படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி முதல்வாரத்தில் தொடங்கவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்
இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ஆம், அனைவரும் எதிர்பார்த்தபடியே ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. 'உதயா', 'அழகிய தமிழ்மகன்' ஆகிய படங்களுக்கு பின்னர் விஜய்-ரஹ்மான் இணைவது இது மூன்றாவது முறையாகும். இதுகுறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.
விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படும் இந்த படத்தை 'தெறி' இயக்குனர் அட்லி இயக்கவுள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கவுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com