முழுமையான வடிவில் தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அரசு அறிவிப்பு!!!

  • IndiaGlitz, [Thursday,May 07 2020]

 

கொரோனா தடுப்பூசி பற்றி உலகின் அரை டஜன் நாடுகள் தீவிரமான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளன. இதில் அமெரிக்கா மனிதர்களின் மீதான தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டு இருக்கிறது. ஜெர்மனி, சீனா போன்ற நாடுகள் அடுத்த வரிசையில் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இஸ்ரேல் கூட தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் இது மனிதர்களின் மீது சோதனை செய்யப்பட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகில் கொரோனா கொடுமையான விளைவுகளை ஏற்படுத்திவரும் நிலையில் கொரோனா தடுப்பூசி ஒன்றை மட்டுமே இந்த உலகம் நம்பியிருக்கிறது. இந்நிலையில் உலகிலேயே முதன் முறையாக கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாக இத்தாலி அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது.

ரோம் நகரில் உள்ள டாகிஸ் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் உள்ள விஞ்ஞானிகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளனர். இந்தத் தடுப்பூசி முதலில் எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது எனவும் எலிகளில் இந்த மருந்து ஆன்டிபாடிகளை உருவாக்கியதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மனித செல்களிலும் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக மிக சிறந்த முறையில் ஆன்டி பாடிகளை உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

டாக்ஸி நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி லூகி ஆரிசிச்சியோ “இந்த தடுப்பூசியை மனித உடலுக்குள் செலுத்தியபோது அது மனித செல்லில் உள்ள கொரோனா வைரஸை அழித்துவிட்டது. இந்த முறையில் மிக வேகமாக தடுப்பூசி செயல்படுவது இதுவே முதல் முறை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இனி மனிதர்களின் மீது செலுத்தி விரைவான சோதனையை ஆரம்பிப்போம் எனவும் அந்நாட்டு விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர். இதன் மூலம் உலகிலேயே கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்த முதல் நாடாக இத்தாலி இருக்கும் எனவும் அந்நாட்டின் விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.

More News

கொரோனா தடுப்பு மருந்து : இஸ்ரேல் அரசின் புதிய அறிவிப்பு என்ன???

கொரோனா நோய்த்தொற்றுக்கான தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்து விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் நப்தாலி பென்னட் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த காட்சியில் விஜய் நடிக்க எப்படி ஒப்புக்கொண்டார்? மாஸ்டர் ரகசியத்தை வெளியிட்ட பிரபலம்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில்

இன்று முதல் ஓப்பன் ஆகும் டாஸ்மாக்: எல்லை தாண்ட தயாராகும் சென்னை 'குடி'மகன்கள்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த சில வாரங்களாக அதிகமாக இருந்த காரணத்தினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது.

டாஸ்மாக் கடைகள் திறப்பு: முதல் டோக்கன்களை வாங்கிய ஸ்பெயின் குடிமகன்கள்

சென்னை தவிர தமிழகம் முழுவதும் இன்று காலை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதை அடுத்து கடந்த 40 நாட்களாக குடிக்காமல் இருந்த குடிமகன்கள் இன்று காலை முதலே டாஸ்மாக் கடைமுன் ஆயிரக்கணக்கில் குவிய

1000க்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் மயக்கம்: விசாகப்பட்டினத்தில் பரபரப்பு

விசாகப்பட்டினம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஆண்கள் பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது