பாலியல் சீண்டல் 10 வினாடிக்கும் குறைவாக இருந்தால் குற்றமில்லையா? சர்ச்சை தீர்ப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
இத்தாலியில் பள்ளி காவலாளியாக பணியாற்றிவந்த ஒருவர் 17 வயது சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார். ஆனால் இந்தக் குற்றம் 10 வினாடிகளுக்கு குறைவான நேரத்திற்கு மட்டுமே நடந்துள்ளது என நேரத்தைக் காரணம் காட்டி வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ள சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
இத்தாலியின் ரோம் நகரில் இயங்கிவரும் பிரபலமான பள்ளி ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2022 ஏப்ரல் மாதத்தில் எப்போதும்போல அந்த மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். ஆனால் அவரைப் பார்த்த காவலாளி அவரைப் பின்புறமாகத் தொட்டு கீழாடையை கழட்டவும் செய்திருக்கிறார். இதனால் திடுக்கிட்டுபோன சிறுமி ஏன் இப்படி செய்கிறீர்கள் எனக் கேட்டதற்கு விளையாட்டாக செய்தேன் என்று சொல்லி சமாளித்துள்ளார்.
ஆனால் தனக்கு நடந்ததை விளையாட்டாக எடுத்துக்கொள்ளாத அந்த சிறுமி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து காவலாளியை அழைத்து விசாரித்தபோது நான் விளையாட்டாக மட்டுமே இதைச் செய்தேன். பாலியல் சீண்டலில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார். இதனால் மேலும் சர்ச்சையான நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தின் விசாரணை வரை சென்றுள்ளது.
இதனால் பாலியல் ரீதியாக அத்துமீறலில் ஈடுபட்ட காவலாளிக்கு மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என்று கூறி சிறுமியின் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிறுமியை அந்த கவாலாளி வெறுமனே 10 வினாடிகளுக்கும் குறைவான நேரத்திற்கு மட்டுமே தொட்டுள்ளார். இதனால் அதை பாலியல் சீண்டலாக எடுத்துக்கொள்ள முடியாது எனக் கூறி கடந்த வாரம் அவரை விடுதலை செய்துள்ளார்.
இதையடுத்து 10 வினாடிகளுக்கு குறைவான நேரத்தில் ஒரு நபர் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தினால் அது வன்கொடுமை இல்லையா? பெண்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் நடக்கும்போது யார் நேரத்தை சரிப்பார்த்துக் கொண்டிருக்க முடியும்? என்று பலவாறு கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
மேலும் நீதிமன்றத்தின் இந்தச் சர்ச்சை தீர்ப்பை எதிர்த்து #10Second எனும் ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சினிமா பிரபலமான பாவ்லே காமிலி 10 நிமிடங்களுக்கு தொட்டு கொண்டே இருப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்ட நிலையில் அது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரை போலவே சில சோஷியல் மீடியா பிரபலங்களும் இந்த கொடுமையை எதிர்த்து தற்போது மீம்ஸ்களை வெளியிட்டும் 10 வினாடிகளுக்கு வீடியோக்களை பதிவிட்டும் தங்களது எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இத்தாலியில் பெண்களுக்கான பாதுகாப்பு இந்த அளவிற்குத்தான் இருக்கிறதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout