கொரோனா எதிரொலி: தன்னை யாரும் நெருங்காமல் இருக்க இத்தாலி நபரின் பலே யோசனை

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது சீனாவை அடுத்த இத்தாலியில் மிக அதிகமான உயிர்ப்பலிகள் கொரோனா வைரஸால் ஏற்பட்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 250 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இத்தாலி பொதுமக்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இத்தாலியை சேர்ந்த ஒருவர் ஒரு மீட்டர் சுற்றளவுள்ள டிஸ்க் ஒன்றை அணிந்து கொண்டு அவர் மார்க்கெட் பகுதிக்கு வந்த காட்சியின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளது இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாமல் இருக்க கைகுலுக்குவது, கட்டிப் பிடிப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும், இந்திய கலாச்சாரத்தின் படி கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்தும் முறையை கடைபிடிக்குமாறு இத்தாலி அரசு கூறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

விஷாலின் அடுத்த படத்தின் அடுத்தகட்ட பணி தொடக்கம்!

விஷால் நடித்து வரும் 'துப்பறிவாளன் 2' படத்தின் பிரச்சனை குறித்து விஷாலுக்கும் இயக்குனருக்கும் இடையே ஒரு பக்கம் நீண்டு கொண்டிருக்கும் நிலையில்

சற்றுமுன் ரஜினிகாந்த் பதிவு செய்த பரபரப்பான டுவீட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் கண்ணோட்டம் குறித்த கருத்துகளை சுமார் அரை மணிநேரம் விளக்கமாக கூறினார்.

தமிழிசை செளந்தர்ராஜன் குறித்து அவதூறு: தமிழ் நடிகர் அதிரடி கைது

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்து அதன்பின்னர் சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக பொறுப்பேற்ற தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் புகைபடத்தை

தீவிரமடைந்த கொரோனா!!!  அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்!!! அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு 

அமெரிக்காவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதையொட்டி அதிபர் ட்ரம்ப் அவசரநிலையை அனைத்து

அரசியலில் இருந்து தப்பிப்பது ஒன்றுதான் ரஜினிக்கு ஒரே வழி: நாஞ்சில் சம்பத்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது அரசியல் நிலைப்பாடுகள் குறித்த கருத்தை தெரிவித்தார்.