கொரோனா எதிரொலி: தன்னை யாரும் நெருங்காமல் இருக்க இத்தாலி நபரின் பலே யோசனை
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் தற்போது சீனாவை அடுத்த இத்தாலியில் மிக அதிகமான உயிர்ப்பலிகள் கொரோனா வைரஸால் ஏற்பட்டு வருகின்றன. நேற்று ஒரே நாளில் இத்தாலியில் 250 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தரும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இத்தாலி பொதுமக்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இத்தாலியை சேர்ந்த ஒருவர் ஒரு மீட்டர் சுற்றளவுள்ள டிஸ்க் ஒன்றை அணிந்து கொண்டு அவர் மார்க்கெட் பகுதிக்கு வந்த காட்சியின் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க இது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளது இந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவாமல் இருக்க கைகுலுக்குவது, கட்டிப் பிடிப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்றும், இந்திய கலாச்சாரத்தின் படி கையெடுத்து கும்பிட்டு வணக்கம் செலுத்தும் முறையை கடைபிடிக்குமாறு இத்தாலி அரசு கூறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Roma, mercato testaccio.#coronavirus #coronavirusitalia #11Marzo #iorestoacasa #restoacasa #chiuderetutto #COVID19 #roma #testaccio pic.twitter.com/wJBSf66Kyu
— L'Antikulturale (@Antikulturale) March 11, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments