ரஜினி படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறிய முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,April 24 2018]

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மெர்க்குரி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வசூலை தந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உள்பட  படக்குழுவினர் அனைவரையும் நேரில் வரவழைத்து பாராட்டு தெரிவித்தார்.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ள கார்த்திக் சுப்புராஜ், 'ரஜினியை நான் இயக்கும் படம் ஒரு ஆக்சன் படம் என்றும், இந்த படத்தின் கதையை தற்போது எழுதி கொண்டிருப்பதாகவும், விரைவில் இந்த படத்தின் நடிக்கும் நட்சத்திரங்கள் உறுதி செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

ஏற்கனவே ரஜினியின் 'கபாலி' காலா' ஆகியவை ஆக்சன் படங்களாக இருக்கும் நிலையில் ரஜினியின் அடுத்த படமும் ஆக்சன் படம் தான் என்பது கார்த்திக் சுப்புராஜின் இந்த பேட்டியின் மூலம் உறுதியாகியுள்ளது.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது

More News

எரிந்த நிலையில் பிரபல டிவி நடிகை: கொலையா? தற்கொலையா?

கேரளாவை சேர்ந்த டிவி நடிகை கவிதா என்பவர் அவருடைய வீட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததால் கேரள டிவி நடிகர் நடிகைகள் இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது

கமல் கட்சியில் இருந்து விலகிய பிரபலம்: மேலும் சிலர் விலகுவதாக தகவல்

நடிகர் கமல்ஹாசன் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான ராஜசேகர் இன்று அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மன்சூர் அலிகான் ஜாமீன் மனு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நடிகர் மன்சூர் அலிகானின் ஜாமீன் மனுவை விசாரணை செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

மும்பை ஆசிரமத்தில் ஒரு மாதம் இருந்தாரா நிர்மலாதேவி?

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கும் நிர்மலாதேவி, கடந்த சில வருடங்களுக்கு முன்னர்

சானியா மிர்சாவுக்கு கிடைக்கும் புதிய பதவி

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கர்ப்பமாக இருப்பதாக அவர் தனது சமூக வலைத்தளத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார்.