100 கிலோ உடல்எடையுடன் மிகவும் சிரமப்பட்டேன்… மனம் திறந்த பிரபல நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்துவருபவர் நடிகர் அபிஷேக் பச்சன். “தூம்“, “குரு“, “யுவா“, “சர்கார்“, “கவி அல்விதா நா கெஹனா“ போன்ற படங்களுக்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். இவருடைய நடிப்பில் தறபோது “பாப் பிஸ்வாஸ்“ எனும் திரைப்படம் வெளிவர இருக்கிறது.
இந்நிலையில் “பாப் பிஸ்வாஸ்“ படத்தின் டிரெய்லர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அந்தப் படத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் சற்று குண்டான தோற்றத்துடன் தேர்ந்த நடிகரைப் போல காட்சியளிக்கிறார். இதுகுறித்து நடிகர் அமிதாப் பச்சனும் தன்னுடைய டிவிட்டரில் “என் மகன் என்பது பெருமையாக உள்ளது“ எனப் பதிவிட்டு இருந்தார்.
இதையடுத்து தனது குண்டான உருவத்தைக் குறித்து நடிகர் அபிஷேக் பச்சன் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். அதில் பாப் பிஸ்வாஸ் படத்திற்காக எனது உடல் எடையை 100-105 கிலோவாகக் கூட்டினேன். ஆனால் படப்பிடிப்பு 80% முடிவடைந்தபோது கொரோனா ஊரடங்குக் காரணமாக படப்பிடிப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இன்னும் 10-15 நாட்களுக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எண்ணினோம். ஆனால் கொரோனா காரணமாக ஒட்டுமொத்த படப்படிப்பும் நிறுத்தப்பட்டதால் மனதளவில் அதிக வேதனை அடைந்தேன். மேலும் லாக்டவுன் முழுவதும் நான் அதே 100 கிலோ உடல் எடையை பராமரிக்க வேண்டி இருந்ததது. எனது உடல்எடையை பராமரிப்பதற்கும் கடினமாக இருந்தது.
ஆரம்பத்தில் உடல்எடையை கூட்டுவதற்காக கொல்கத்தாவில் இருந்து நிறைய இனிப்புகளை வாங்கி உண்டேன். பின்னர் கொரோனா நேரத்தில் அதைப் பராமரிப்பதற்கு சிரமப்பட்டேன் என்று தெரிவித்துள்ளார். இந்தத் தகவலையடுத்து நடிகர் அபிஷேக் பச்சனின் ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com