ஒரு லட்ச ரூபாயை கூட கண்ணால் பார்க்காதவருக்கு ஒன்றரை கோடி ரூபாய் வரி! அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
இதுவரை வாழ்நாளில் ஒரு லட்ச ரூபாயைக் கூட மொத்தமாக கண்ணால் பார்க்காத தினக்கூலி வேலை செய்து வரும் ஒருவருக்கு ஒன்றரை கோடி வரி விதித்து வருமான வரி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாஹாஷேப் என்பவர் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு தினமும் வேலை கிடைப்பது கூட இல்லை. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வேலை கிடைக்கும் என்றும் அதில் கிடைத்த வருமானத்தை வைத்து தனது குடும்பத்தை நடத்தி வருகிறார் என்றும் மிகவும் ஏழ்மை நிலையில் இவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் வருமான வரித்துறை இவருக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில் ஒன்றரை கோடி ரூபாய் இந்த ஆண்டு வருமான வரியாக நீங்கள் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நோட்டீசை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாஹாஷேப், ‘நான் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கிறேன். என்னுடைய வாழ்நாளில் இதுவரை நான் ஒரு லட்சம் ரூபாயைக் கூட மொத்தமாக பார்த்து இல்லை. அவ்வாறு இருக்கும்போது எப்படி நான் ஒன்றரை கோடி ரூபாயை வரியாக கட்ட முடியும். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவருக்கு அனுப்பப்பட்ட வருமானவரி நோட்டீசில் இவர் வங்கிகளில் லட்சக்கணக்கில் பிக்சட் டெபாசிட் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வருமான வரித்துறையினர் விரைவில் தவறாக நோட்டீஸ் அனுப்பிய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout