ஆண்டவர் பெயரில் 6,000 கோடி அபேஸ்… கையும் களவுமாக சிக்கிய கும்பல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்களை நன்கொடையாகப் பெற்று கேரளாவில் உள்ள பிலீவர் சர்ச் எனும் அமைப்பு முறைகேட்டில் ஈடுபட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதையடுத்து இந்த அமைப்புக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் தற்போது வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் இருந்து நன்கொடையாக பெறும் பணத்தை இந்த அமைப்பு உள்ளூரில் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இதனால் இந்த அமைப்புக்கு சொந்தமாக உள்ள அனைத்து கிளைகளையும் விசாரிக்கும்படி தற்போது உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்திலும் இந்த அமைப்புக்கு சொந்தமான 66 கிளைகள் செயல்பட்டு வரும் நிலையில் இங்கும் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த கிளைகளில் முறைகேடான வழிகளில் பெறப்பட்ட ரூ.15 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் கேராளவின் பல்வேறு பகுதிகளில் இந்த அமைப்புக்குச் சொந்தமான பல முதலீட்டு நிறுவனங்கள் இயங்கி வருவதாகவும் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பிலீவர் சர்ச் எனும் அமைப்பை சர்வதேச FCRA வின் உரிமம் பெற்று கேரளாவின் திருவல்லா பகுதியில் யோகனன் என்பவர் அதன் தலைமை அலுவலகத்தை நிறுவி இருக்கிறார். இந்த தலைமை அலுவலகத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தியா முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரி மற்றும் தொண்டு நிறுவனங்கள் செயல்பட்ட வருகின்றன. ஆனால் இந்த நிறுவனங்களில் வாயிலாகப் பெறப்படும் நன்கொடை பணத்தை முதலீடாக பயன்படுத்தி தற்போது ரூ.6,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக வருவமான வரித்துறையினர் பலத்த குற்றச்சாட்டை வைத்திருக்கின்றனர்.
பிலீவர் சர்ச்சின் நிறுவனர் யோகனன் ஏற்கனவே அமெரிக்காவில் உள்ள அதன் கிளை அலுவலகத்தில் முறைகேடான வழிகளில் பணம் ஈட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் இருந்து வெளிவந்த யோகனன் தற்போது கேரளாவில் முறைகேடான வழிகளில் பணம் சம்பாதித்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் கனடாவிலும் இவர் காஸ்பல் ஃபார் ஏசியா எனும் அமைப்பின் வழியாக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இத்தனை அடுக்கடுக்கான குற்றங்களில் முக்கிய நபராகக் கருதப்படும் யோகனனை பற்றி இதுவரை எந்த ஊடகங்களும் வாய்த் திறக்கவில்லை எனும் குற்றச்சாட்டும் தற்போது பொதுவெளியில் பேசப்படுகின்றன.
முன்னதாக சபரிமலை பகுதியில் புதிதாக விமான நிலையம் கட்டுவதற்காக கேரள அரசு நிலத்தை கையகப்படுத்திய போது செலுவல்லி எனும் பகுதியில் உள்ள ரப்பர் எஸ்டேட்டையும் முதலில் கையப்படுத்தியது. மேலும் கேரள அரசாங்கத்தின் நிலத்தை முறைகேடாக பிலீவர் சர்ச் சொந்தம் கொண்டாடி வருவதாகவும் குற்றம் சாட்டியது. ஆனால் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பிலீவர் சர்ச் அமைப்பு இழப்பீட்டுத் தொகை தருவதாகக் கூறியதும் கேரள அரசு அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டது.
அந்நேரத்தில் பிலீவர் சர்ச் அமைப்பு பற்றியும் அதன் நிறுவனர் யோகனன் பற்றியும் ஊடகங்கள் அடிக்கடி பேசிவந்தன. அதுமுதற்கொண்டு பிலீவர் சர்ச் அமைப்பின் சொத்து நிறுவனங்களைப் பற்றி கடுமையான விவாதங்கள் எழும்பின. பின்னர் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ரூ.6,000 கோடி மதிப்பிலான முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments