தலைமைச்செயலாளர் வீட்டை அடுத்து தலைமைச்செயலகத்திலும் ரெய்டு. துணை ராணுவம் திடீர் குவிப்பு!

  • IndiaGlitz, [Wednesday,December 21 2016]

சமீபத்தில் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட வருமான வரி ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் இன்று காலை முதல் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் இல்லத்தில் வருமான வரித்துறையினர்களின் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்முறையாக தலைமைச்செயலாளர் வீட்டில் சோதனை நடந்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது சென்னை தலைமை செயலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக தலைமைச் செயலாளரின் அறையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், இந்த சோதனையில் 20 அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளதாகவும், சோதனை செய்பவர்களுக்கு பாதுகாப்பாக துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த சோதனை நடவடிக்கைகளால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்திலும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

More News

சேகர் ரெட்டி அதிரடி கைது. சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

சமீபத்தில் வருமான வரித்துறையினர் சேகர் ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை செய்து ரூ.131 கோடி பணமும், 177 கிலோ தங்கமும்...

நடிகை பூஜாவின் திருமண குழபத்திற்கு விடை கிடைத்ததா?

மாதவன் நடித்த 'ஜேஜே' படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் அஜித்தின் 'அட்டகாசம்' , பாலாவின் 'நான் கடவுள்'...

'சென்னை 303' வீரருக்கு 'சென்னை 28' கேப்டன் பாராட்டு

இந்திய கிரிக்கெட் அணி சென்னை டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று வரலாற்று சாதனை செய்துள்ளது...

பணம் கொடுக்காததால் வங்கி ஊழியர் முன் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்

உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பின்னர் ரூபாய் நோட்டுக்களை கண்களால் பார்ப்பதே...

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம்- வழக்கு பதிவு செய்த பள்ளித்தோழி

முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின் கடந்த டிசம்பர் 5...