மெர்சல் பட வசனம் எதிரொலி: மருத்துவ பரிசோதனை நிலையங்களில் அதிரடி ரெய்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த 'மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி உள்பட பல சர்ச்சைக்குரிய வசனம் இடம்பெற்றது என்பது தெரிந்ததே. இதே படத்தில் இடம்பெற்ற இன்னொரு வசனம் மெடிக்கல் செக்கப். மெடிக்கல் செக்கப் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை குறித்து விஜய் இந்த படத்தில் ஒரு வசனம் பேசியிருப்பார். இந்த வசனம் பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் பெங்களூரில் மெடிக்கல் செக்கப் செய்யும் ஏழு தனியார் மருத்துவ பரிசோதனை நிலையங்களில் இன்று அதிரடியாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். மருத்துவ பரிசோதனை நிலையங்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே கூட்டுச்சதி நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையற்ற பரிசோதனைகளுக்கு நோயாளிகளை கட்டாயப்படுத்தி மருத்துவர்கள் அனுப்பியதும் இந்த சோதனை மூலம் தெரியவந்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த சோதனையில் 100 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட கணக்கில் வராத ரொக்கப்பணம், நகைகள், வெளிநாட்டு கரன்சி மற்றும் வங்கிக் கணக்குகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout