ஐடி ரெய்டில் சிக்கிய அஜித்-விஜய் பட நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்த ‘லவ் டுடே’ மற்றும் அஜித் நடித்த ‘ராஜா’ உள்பட பல தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் படங்களில் நடித்தவர் நடிகை மந்த்ரா. இவர் சமீபத்தில் வெளிவந்த ஜீவாவின் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த நான்கு நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சென்னை உள்பட தென்னிந்தியாவில் புகழ் பெற்ற கலர்ஸ் உடல் எடை குறைப்பு நிறுவனத்தின் உரிமையாளரின் நெருங்கிய உறவினர் நடிகை மந்த்ரா என்பதும் கடந்த நான்கு நாட்களாக கலர்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதை அடுத்து நடிகை மந்த்ரா வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிறுவனத்தின் விளம்பரத்தில் மந்த்ரா மட்டுமின்றி நடிகை ரம்பாவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கிய ஆவணங்கள் குறித்த தகவல் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments