பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜியின் 'எல்.கே.ஜி' படத்தை தயாரித்த வேல்ஸ் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் வேல்ஸ் கல்விக்குழுமம் தொடர்புடைய 27 இடங்களிலும் தெலுங்கானா மாநிலத்தில் 3 இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாகவும், வேல்ஸ் குழுமத் தலைவர் ஐசரி கணேஷ் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
'எல்.கே.ஜி' படத்தை அடுத்து வேல்ஸ் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ'. இந்த படம் எம்ஜிஆர், ஜெயலலிதா நடிப்பில் உருவாகும் அனிமேஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout