ராம்மோகன் ராவுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ். இன்று ஆஜராக உத்தரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னள் தலைமைசெயலாளர் ராம்மோகன் ராவ் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து கோடிக்கணக்கில் கணக்கில் வராத பணம், கிலோ கணக்கில் தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இந்நிலையில் இன்று பிற்பகல் நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் ராமமோகன ராவ் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ராமமோகன ராவ் மட்டுமின்றி அவருடைய மகன் விவேக்கும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மாலை இருவரிடமும் விசாரணை செய்ய உள்ளனர்.
ஏற்கனவே பதினாறு கோடி ரூபாய் வரை வருமான வரி ஏய்ப்பு செய்துள்ளதை ராமமோகன ராவ் ஒப்புக்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் இன்றைய விசாரணைக்கு பின்னர் வருமான வரித்துறையினர்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை அறிய நாடே மிகவும் பரபரப்புடன் காத்து கொண்டிருக்கின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout