இது அலுவலகமா? தியேட்டரா? 'வாரிசு' டிரைலரை கொண்டாடிய ஐடி ஊழியர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியான நிலையில் இந்த டிரைலர் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு சிலர் இந்த டிரைலருக்கு நெகட்டிவ் விமர்சனங்களை தந்தாலும் பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இந்த டிரைலர் மிகப்பெரிய சாதனை செய்துள்ளது என்றும் 12 மணி நேரத்தில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்று சாதனை செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளங்கள் ஸ்தம்பிக்கும் அளவுக்கு ‘வாரிசு’ டிரைலர் குறித்த பதிவுகள்தான் நடந்த நிலையில் தனியார் ஐடி நிறுவனமொன்றில் ‘வாரிசு’ படத்தின் டிரைலர் கொண்டாடப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னணி தனியார் ஐடி நிறுவனத்தில் உள்ள தொலைக்காட்சி அனைத்திலும் நேற்று ‘வாரிசு’ டிரைலர் ஒளிபரப்பப்பட்ட நிலையில் அங்கு பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் விஜய்யை கொண்டாடினார்கள். இது அலுவலகமா? அல்லது தியேட்டரா? என்று கேட்கும் அளவுக்கு இந்த கொண்டாட்டம் இருந்தது.
இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ‘வாரிசு’ திரைப்படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து இந்த படம் வசூலிலும் சாதனை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Private IT Company Celebrating #Varisu Trailer 😲💥#VarisuTrailer @actorvijay pic.twitter.com/QIshp3NJ2e
— PRATHAP CHANDRAN (V.F.C) (@Prathap9061) January 4, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com