நான் அவரை பலமுறை சந்தித்து இருக்கிறேன்: தற்கொலை செய்த காவல்துறை அதிகாரி குறித்து விஷால்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
கோவை சரக டிஐஜி விஜயகுமார் என்பவர் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது மறைவு குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கோவை சரக டிஐஜி விஜயகுமார் இன்று காலை நடை பயணத்தை முடித்துவிட்டு திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட பல அரசியல் பிரமுகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கோவை சரக டிஐஜி மறைவுக்கு தனது இரங்கலை நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். திரு விஜயகுமார் ஐபிஎஸ் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார் என்பது இந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. இது அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தி. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
நான் அவரை பலமுறை சந்தித்துள்ளதால் அவருடைய இழப்பை சொல்ல வார்த்தைகள் இல்லை. அவரது இறுதி முடிவு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்,.
It is very saddening to know that Mr. Vijayakumar IPS (DIG of Coimbatore) committed suicide.
— Vishal (@VishalKOfficial) July 7, 2023
Shocking news to all. My deepest condolences to the family and I have no words to say because I have met him so many times.
His final decision should have been avoided.#MentalHealth…
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments