விஜய்க்கு மீண்டும் 'தலைவா' டேக்லைன் போட்ட பாடலாசிரியர்.. என்ன திட்டம்?

  • IndiaGlitz, [Saturday,December 03 2022]

தளபதி விஜய் நடித்த 'தலைவா’ என்ற திரைப் படத்தின் டைட்டிலில் it's time to lead’ என்ற டேக்லைன் இருந்த நிலையில் அதன் பிறகு அந்த படம் பெரும் பிரச்சனைக்குள்ளானது என்பதும், அதன்பின்னர் அந்த டேக்லைன் நீக்கப்பட்டு ரிலீஸ் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’வாரிசு’ படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைத்தளத்தில் ’தலைவா’ படத்தின் it's time.... என பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர் தனது பதிவில், ‘30 வருட முயற்சி, வியர்வை, நெஞ்சின் உள் அறைகளில் உரம் போட்டு வளர்த்து தீ’ எனவும் அவர் பதிவு செய்து உள்ளார்.

தளபதி விஜய் விரைவில் அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் it's time to lead என்ற டேக்லைனை அவருக்கு நெருக்கமானவரிடம் இருந்து வெளியாகி உள்ளதால் விரைவில் அவர் அரசியலுக்கு வருவாரா? அவருடைய திட்டம் தான் என்ன? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளது என்பதும் தமன் இசையில் உருவான இந்த பாடலை ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அடிதடியில் இறங்கிய ஷிவின் - தனலட்சுமி.. வேடிக்கை பார்க்கும் சக போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக போட்டியாளர்களுக்கு இடையே கடும் வாக்குவாதங்கள் எழுந்து வருகின்றன என்பதும் அது மட்டுமின்றி நேற்று அசீம் சக போட்டியாளரை அடிக்க கையை ஓங்கியதும்,

ஒரே புகைப்படத்தில் கமல், ராஜமெளலி, லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன்: என்ன திட்டம்?

உலக நாயகன் கமலஹாசனுடன் பிரபல இயக்குனர்கள் எஸ்எஸ் ராஜமெளலி, கௌதம்

'வெண்ணிலா கபடி குழு' நடிகர் திடீர் மரணம்: திரையுலகினர் இரங்கல்!

பிரபல இயக்குனர் சுசீந்தரன் இயக்கத்தில் உருவான 'வெண்ணிலா கபடி குழு' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் திடீரென காலமானதை அடுத்து திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தளபதி விஜய்யின் 'வாரிசு': செம அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

 தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்பா பணிகள் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 

விஜய்-ரன்வீர் சிங் படத்தை இயக்குகிறாரா? பிரபல இயக்குனர் தகவல்!

பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் உருவான 'சர்க்கஸ்' திரைப்படம் வரும் 23ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி