ஒரே நாளில் வெளியாகும் இரண்டு சமந்தா படங்கள்

  • IndiaGlitz, [Monday,July 23 2018]

கோலிவுட் திரையுலகில் ஒரு பிரபல நடிகையின் இரண்டு திரைப்படங்கள் ஒரே நாளில் வெளிவருவது என்பது அபூர்வமாக நடக்கும் நிகழ்வு என்ற நிலையில் நடிகை சமந்தாவின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனுடன் சமந்தா நடித்த 'சீமராஜா' திரைப்படம் வரும் செப்டம்பர் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் சமந்தா நடித்த இன்னொரு திரைப்படமான 'யூடர்ன்' திரைப்படமும் அதே நாளில் வெளிவந்துள்ளது. மேலும் நடிகை சமந்தாவும் தனது சமூக வலைத்தளத்தில் 'யூடர்ன்' படத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்துள்ளார். இந்த இரண்டு படங்களும் வெற்றி பெறும் பட்சத்தில் சமந்தாவின் மார்க்கெட் உச்சத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு 'நடிகையர் திலகம்', ரங்கஸ்தலம், 'இரும்புத்திரை ஆகிய வெற்றிப்படங்களில் சமந்தா நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டரில் முதல்முறையாக சமந்தா நடித்த இந்த படத்தை பவன்குமார் இயக்கியுள்ளார். இதே படத்தை இவர் கன்னடத்தில் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.