அறிவியல் ஆசிரியர் அப்பவே அப்படித்தானாம்.. மறைத்த பள்ளி நிர்வாகம்? வெடிக்கும் சர்ச்சை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆன்லைனில் பாடம் நடத்துகிறேன் என்ற பேர்வழியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த புகாரில் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகமது கடத்ந சில தினங்களுக்கு முன்பு போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரசு உதவிப்பெறும் பள்ளியில் பணியாற்றி வரும் அறிவியல் ஆசிரியர் ஹபீப் முகமது “பள்ளிப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வா… அப்படி வராவிட்டால் இந்த ஆண்டு நீ பாஸாக முடியாது. இந்த விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது” என்பது போன்று பள்ளி மாணவிகளுக்கு மிரட்டல் விடுத்த ஆபாச வீடியோக்கள் கடந்த சில தினங்களாக சோஷியல் மீடியாவில் கடும் அதிர்ச்சியை எற்படுத்தியது.
தற்போது மாணவிகள் புகார்களுக்காக சிறையில் இருக்கும் ஆசிரியர் ஹபீப் முகமது குறித்து மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. அதில், கடந்த 2 வருடங்களுக்கு முன்பே ஆசிரியர் ஹபீப் ஒரு மாணவியிடம் பள்ளி வகுப்பறையில் வைத்தே அத்து மீறலில் ஈடுபட்டார் என்றும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளிக்க இருந்தபோது, மாணவியின் எதிர்காலத்தை காரணமாகக் காட்டி அதை பள்ளி நிர்வாகமே தடுத்த நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்காக ஆசிரியர் ஹபீப் முகமது மீது ஒழுங்குமுறை நடவடிக்கை மேற்கொண்ட பள்ளி நிர்வாகம் ஒருசில தினங்களுக்கு பின்பு மீண்டும் பள்ளியில் சேர்த்துக் கொண்டதாகவும் தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பே அறிவியல் ஆசிரியர் மீது பாலியல் தொல்லை புகார் எழுந்த நிலையில் அவரை எந்த அடிப்படையில் மீண்டும் பள்ளியில் இணைத்துக் கொண்டனர் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஹபீப் முகமது மீது பள்ளி மாணவிகள் கொடுத்த புகார் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com