விவசாயிகள் பிரச்சனை: பிரபலங்களின் 'உள்நாட்டு விவகாரம்' கருத்துக்கு அமெரிக்க நடிகையின் நச் பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
விவசாயிகள் போராட்டத்திற்கு தனது டுவிட்டரில் ஆதரவு தெரிவித்த பாப் பாடகி ரிஹானாவிற்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள பிரபலங்கள் தங்களது டுவிட்டரில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே
சச்சின் டெண்டுல்கர் உள்பட பல கிரிக்கெட் பிரபலங்களும், கங்கனா ரனாவத் உள்பட பல திரையுலக பிரபலங்களும் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அனைவரும் கிட்டத்தட்ட கூறிய ஒரே கருத்து என்னவெனில் ’உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டில் உள்ளவர்கள் தலையிட வேண்டாம் என்றும், இந்தியாவில் உள்ள பிரச்சனைகளை இந்தியாவில் உள்ளவர்களே தீர்த்துக் கொள்வார்கள் என்றும் இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் தெரிவித்து இருந்தனர்
இந்த நிலையில் இந்திய பிரபலங்களின் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க நடிகை அமெண்ட செர்னி என்பவர் கூறியதாவது: இந்திய விவசாயிகளின் பிரச்சினையை புரிந்து கொள்ள இந்தியராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் மனித நேயம் இருந்தாலே போதும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க நடிகையின் இந்த பதிவு தற்போது மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டு வருகிறது. இதனை அடுத்து தற்போது விவசாயிகளின் பிரச்சினை சர்வதேச பிரச்சினையாக மாறி விட்டதாகவே கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout