அது முழுக்க முழுக்க என்னோட தவறுதான்: ஆர்.ஜே.பாலாஜி கூறியது எதை தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
காமெடி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி திரையில் தான் காமெடி நடிகர், ஆனால் நிஜத்தில் ஒரு பொருப்புள்ள சமூகநல சிந்தனையாளர் என்பது பல நேரங்களில் தெரியவந்துள்ளது. குறிப்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தை ஆக்கபூர்வமாக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்
இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென உனர்ச்சிவசப்பட்டு சமூகவலைத்தளத்தில் நடிகர் சதீஷுடன் மோதிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடித்த காமெடி நடிகர் யார்? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆர்ஜே பாலாஜி, "சதீஷ். ப்ளீஸ் நம்புங்கள்" என்று பதிலளித்தார். இதற்கு சதீஷ், "ப்ரோ. ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது இறுதிநாளில் நீங்கள் போட்ட வீடியோ காமெடியை விடவா? ப்ளீஸ் நம்புங்கள்" என்று பதிலடி கொடுத்தார்.
உடனே ஆர்ஜே பாலாஜி, "செம பன்ச். நல்ல காமெடி. இதில் பாதியையாவது படத்திலயும் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும். வாழ்த்துகள்" என்று மீண்டும் வம்புக்கு இழுக்க அதற்கு சதீஷ், , "தேவையில்லாமல் இதை ஆரம்பித்த நண்பருக்கு கீழே கமெண்ட்கள் மூலமாக பதிலளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி" என்று கூறி முடித்தார்
இதுகுறித்து ஆர்.ஜே பாலாஜி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், 'இது முழுக்க முழுக்க என்னோட தவறுதான். கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் என்று தான் நான் முதலில் டைப் செய்தேன். பின்னர் திடீரென சதீஷை வம்புக்கு இழுத்துவிட்டேன். இதனால் சில மனக்கசப்புகள் இருவருக்கும் ஏற்பட்டுவிட்டது. சதீஷுடன் எனக்கு நெருங்கிய பழக்கமும் கிடையாது, எனவே நான் அதிக உரிமை எடுத்து கலாய்த்தது எனது தவறுதான். அந்த டுவீட்டை நான் டெலிட் செய்திருக்கலாம், ஆனால் பலர் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து மீண்டும் பிரச்சனையை கிளப்புவார்கள் என்பதால் நடந்தது நடந்துவிட்டது, இனிமேல் இதுபோன்ற நிகழ்ச்சி நடக்காமல் பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்து அதை அப்படியே விட்டுவிட்டேன்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments