அது முழுக்க முழுக்க என்னோட தவறுதான்: ஆர்.ஜே.பாலாஜி கூறியது எதை தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,December 19 2017]

காமெடி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி திரையில் தான் காமெடி நடிகர், ஆனால் நிஜத்தில் ஒரு பொருப்புள்ள சமூகநல சிந்தனையாளர் என்பது பல நேரங்களில் தெரியவந்துள்ளது. குறிப்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தை ஆக்கபூர்வமாக மட்டுமே பயன்படுத்தி வருகிறார்

இந்த நிலையில் கடந்த மாதம் திடீரென உனர்ச்சிவசப்பட்டு சமூகவலைத்தளத்தில் நடிகர் சதீஷுடன் மோதிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிடித்த காமெடி நடிகர் யார்? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஆர்ஜே பாலாஜி, சதீஷ். ப்ளீஸ் நம்புங்கள் என்று பதிலளித்தார். இதற்கு சதீஷ், ப்ரோ. ஜல்லிக்கட்டு பிரச்சினையின் போது இறுதிநாளில் நீங்கள் போட்ட வீடியோ காமெடியை விடவா? ப்ளீஸ் நம்புங்கள் என்று பதிலடி கொடுத்தார்.

உடனே ஆர்ஜே பாலாஜி, செம பன்ச். நல்ல காமெடி. இதில் பாதியையாவது படத்திலயும் பண்ணீங்கன்னா நல்லா இருக்கும். வாழ்த்துகள் என்று மீண்டும் வம்புக்கு இழுக்க அதற்கு சதீஷ், , தேவையில்லாமல் இதை ஆரம்பித்த நண்பருக்கு கீழே கமெண்ட்கள் மூலமாக பதிலளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி என்று கூறி முடித்தார்

இதுகுறித்து ஆர்.ஜே பாலாஜி நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறுகையில், 'இது முழுக்க முழுக்க என்னோட தவறுதான். கவுண்டமணி, வடிவேலு, சந்தானம் என்று தான் நான் முதலில் டைப் செய்தேன். பின்னர் திடீரென சதீஷை வம்புக்கு இழுத்துவிட்டேன். இதனால் சில மனக்கசப்புகள் இருவருக்கும் ஏற்பட்டுவிட்டது. சதீஷுடன் எனக்கு நெருங்கிய பழக்கமும் கிடையாது, எனவே நான் அதிக உரிமை எடுத்து கலாய்த்தது எனது தவறுதான். அந்த டுவீட்டை நான் டெலிட் செய்திருக்கலாம், ஆனால் பலர் அதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து மீண்டும் பிரச்சனையை கிளப்புவார்கள் என்பதால் நடந்தது நடந்துவிட்டது, இனிமேல் இதுபோன்ற நிகழ்ச்சி நடக்காமல் பார்த்து கொள்ளலாம் என்று முடிவு செய்து அதை அப்படியே விட்டுவிட்டேன்' என்று கூறினார்.

More News

'ஐஸ் அவுஸ் டு ஒயிட் அவுஸ்' நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? ஆர்.ஜே.பாலாஜி

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய ஆர்.ஜே.பாலாஜி வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அமெரிக்காவில் காமெடி ஷோ ஒன்றை நடத்துகிறார்.

வேற லெவல் சிவகார்த்திகேயனை 'வேலைக்காரனில்' பார்க்கலாம்: ஆர்.ஜே.பாலாஜி

சிவகார்த்திகேயன் நடித்த 'வேலைக்காரன்' திரைப்படம் இன்னும் மூன்று நாட்களில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

பாலக்காடு ஐயராக வாழ்வது எய்ட்ஸை விட கொடுமையானது: லட்சுமி ராமகிருஷ்ணன்

சமீபத்தில் வெளியான 'அருவி' திரைப்படம் கோலிவுட் திரையுலகின் ஒரு திருப்புமுனை படம் என்றே கூறலாம்.

ஓகி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய முயற்சியில் நிதி திரட்டும் ஜி.வி.பிரகாஷ்

நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் எந்த ஒரு சமூக பிரச்சனைகளுக்கும் திரையுலகில் இருந்து முதல் ஆளாக குரல் கொடுக்கும் நபராக இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே.

வெற்றியை கொண்டாடிய அருவி -சென்னை 2 சிங்கப்பூர் டீம்

இந்த ஆண்டில் பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஸ்டார்களின் படங்களின் வெற்றிகளே சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்டு கொண்டிருந்த நிலையில், எந்தவித பரபரப்பும் இன்றி, பெரிய எதிர்பார்ப்புகளும் இன்றி வெளியான