நான் அந்த இடத்தில் இருந்திருந்தால்? ஐஸ்வர்யாவின் அட்டகாசம் குறித்து நித்யா
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக சர்வாதிகாரி ராணி என்ற பெயரில் நடக்கும் அருவருக்கத்தக்க சம்பவங்களால் பிக்பாஸ் ரசிகர்கள் கொதித்து போய் உள்ளனர் என்னதான் டாஸ்க் ஆக இருந்தாலும் ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் அருவருக்கத்தக்க வகையில் இருப்பதாக அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக பாலாஜி மீது குப்பையை கொட்டிய விவகாரத்தில் இதுவரை ஒருவர் கூட ஐஸ்வர்யாவின் செய்கைகளை நியாயப்படுத்தவில்லை
இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளராக இருந்தவரும் பாலாஜியின் மனைவியுமான நித்யா நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், 'நான் ஒருவேளை அந்த இடத்தில் இருந்திருந்தால் நிச்சயம் ஐஸ்வர்யாவை தட்டி கேட்டிருப்பேன் என்றும், என்னதான் டாஸ்க்காக இருந்தாலும் இதுவொரு மனிதத்தன்மையற்ற செயல் என்றும் பிக்பாஸ் விதிப்படி ராணியை அவமரியாதை செய்பவரை ஜெயிலில் தான் போட வேண்டுமே தவிர குப்பையை எடுத்து மேலே கொட்டுவது என்பதை யாராலும் ஏற்று கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும் பாலாஜி எனது கணவர் என்பதற்காக இதனை சொல்லவில்லை என்றும், பாலாஜி இடத்தில் யார் இருந்திருந்தாலும் எனது கருத்து இதுதான் என்றும் கூறியுள்ளார். மேலும் அந்த வீட்டின் சீனியரான பொன்னம்பலம், ஐஸ்வர்யாவை தட்டி கேட்டிருக்கலாம் என்றும் அவர் அமைதியாக இருந்தது தனக்கு ஏமாற்றத்தை அளித்ததாகவும் நித்யா கூறியுள்ளார்.
பாலாஜி எந்த அளவுக்கு கோபப்படுபவர் என்று தனக்கு தெரியும் என்றும் இருப்பினும் ஐஸ்வர்யா அசிங்கப்படுத்தியதை பொறுத்து கொண்டு அமைதியாக இருந்தது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாகவும், அவர் தனது கோபத்தை 50% குறைத்து கொண்டதையே இது காண்பிப்பதாகவும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com