மக்களுக்கு ஆக்சிஜன் வழங்காதது அரசுக்கு வெட்கக்கேடு ...! உபி குறித்து கூறிய உயர்நீதிமன்றம்...!

  • IndiaGlitz, [Wednesday,April 28 2021]

மக்களுக்கு ஆக்சிஜன் கொடுக்காதது வெட்கக்கேடானது என உத்திரப்பிரதேச அரசாங்கத்தை, அலகாபாத் நீதிமன்றம் கூறியுள்ளது.

சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகள் நிரம்பிய நிலையில், பொதுமக்களுக்காக ஆக்சிஜன் வழங்காதது உத்திரப்பிரதேச மாநில அரசிற்கு வெட்கக்கேடு என, பொதுநல வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

உபி-யில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு செல்பவர்கள், டெங்கு நோய் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவார்கள் போலும். அந்த அளவிற்கு உபி-யில் மின்சார வசதி மற்றும் கழிப்பறை வசதி போன்றவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கொரோனா தொற்று குறித்த தடுப்பு நடவடிக்கைகளில், உபி- முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய வழியை தவிர வேறு இல்லை என்ற அணுகுமுறையை கைவிடவேண்டும். நீதிமன்றம் கூறிய அறிவுரைகளை அவர் பின்பற்றவேண்டும்.

கொரோனாவை தடுக்க அம்மாநிலத்தில் தொடர்ந்து 14 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். அதுமட்டுமில்லாமல் உள்ளாட்சி தேர்தலின்போது, சுமார் 135 அரசு ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.