விஜயகாந்த்-திற்கு வழக்கமான பரிசோதனை தான்.... தேமுதிக அறிக்கை...!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல்நிலைக்குறைபாடு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக-வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் தலைவருமான விஜயகாந்த் அவர்கள் கடந்த சில வருடங்களாகவே, உடல் நலம் சரியில்லாமல் இருந்து வருகிறார். இதனால் அவர் அரசியலில் ஈடுபடாமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வந்தார். அண்மையில் நடந்த சட்டமன்ற தேர்தலில் கூட, கட்சி பிரச்சாரத்திற்காக வெளியில் செல்லாமல் இருந்தார். குறிப்பிட்ட ஒரு தொகுதிக்கு மட்டும் சென்று கையசைத்து வாக்குகள் கேட்டார். நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் அமமுக-வுடன் கூட்டணி வைத்துக்கொண்ட தேமுதிக தோல்வியை தழுவியது. இதனால் அவ்வப்போது அரசியல் குறித்த ஒருசில அறிக்கைகளை வெளியிட்டு வந்தார் விஜயகாந்த்.
இந்நிலையில் இன்று காலை 3.30 மணியளவில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத்தொடர்ந்து தேமுதிக கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
"விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது விஜயகாந்த் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்" எனக் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com