ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த தாயின் உடலை பைக்கில் வைத்து எடுத்துச் சென்ற அவலம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திர மாநிலத்தில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் இறந்துபோன ஒரு பெண்மணியின் உடலை எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அவரது உறவினர்கள் பல மணிநேரம் போராடியுள்ளனர். இதையடுத்து ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த அவரது மகனும் மருமகனும் சேர்ந்து பைக்கில் வைத்து இறந்த உடலை எடுத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தின் மண்டசா எனும் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கொரோனா அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில் அந்த ரிசல்ட் வருவதற்கு முன்பாகவே நோயின் தீவிரத்தால் உயிரிழந்தும் விட்டார். இதையடுத்து இறந்த உடலை எடுத்துச் செல்ல உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
ஆனால் பல மணிநேரம் ஆன பிறகும் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்தவரின் மகனும் மருமகனும் சேர்ந்து இறந்த உடலை பைக்கில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் கண்கலங்கிய நிலையில் இப்படியும் ஒரு நிலைமையா? என பதற்றம் அடைந்து இருப்பதும் ஆந்திர மாநிலத்தில் நடந்து இருக்கிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து வடமாநிலங்களில் இறந்த உடலை எரிப்பதற்கு வரிசையில் நிற்கும் அவலத்தைப் போலவே தற்போது தென் மாநிலங்களிலும் துவங்கி விட்டதா எனவும் சிலர் பயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments