ஆம்புலன்ஸ் கிடைக்காமல் இறந்த தாயின் உடலை பைக்கில் வைத்து எடுத்துச் சென்ற அவலம்!

  • IndiaGlitz, [Tuesday,April 27 2021]

ஆந்திர மாநிலத்தில் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் இறந்துபோன ஒரு பெண்மணியின் உடலை எடுத்துச் செல்வதற்கு ஆம்புலன்ஸ் கிடைக்காமல் அவரது உறவினர்கள் பல மணிநேரம் போராடியுள்ளனர். இதையடுத்து ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த அவரது மகனும் மருமகனும் சேர்ந்து பைக்கில் வைத்து இறந்த உடலை எடுத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டத்தின் மண்டசா எனும் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கொரோனா அறிகுறிகளோடு அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்ட நிலையில் அந்த ரிசல்ட் வருவதற்கு முன்பாகவே நோயின் தீவிரத்தால் உயிரிழந்தும் விட்டார். இதையடுத்து இறந்த உடலை எடுத்துச் செல்ல உறவினர்கள் ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

ஆனால் பல மணிநேரம் ஆன பிறகும் ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழந்தவரின் மகனும் மருமகனும் சேர்ந்து இறந்த உடலை பைக்கில் வைத்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்தக் காட்சியைப் பார்த்த பலரும் கண்கலங்கிய நிலையில் இப்படியும் ஒரு நிலைமையா? என பதற்றம் அடைந்து இருப்பதும் ஆந்திர மாநிலத்தில் நடந்து இருக்கிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து வடமாநிலங்களில் இறந்த உடலை எரிப்பதற்கு வரிசையில் நிற்கும் அவலத்தைப் போலவே தற்போது தென் மாநிலங்களிலும் துவங்கி விட்டதா எனவும் சிலர் பயத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

More News

2 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்....! மதுப்பிரியர்கள் அதிர்ச்சி...!

தொடர்ந்து 2 நாட்களுக்கு மதுபானக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

உயிருடன் இருக்கும்போதே கண்ணீர் போஸ்டர்:  தமிழ் நடிகையின் கமெண்ட் என்ன தெரியுமா?

https://tamil.news18.com/news/entertainment/cinema-actress-vindhya-slams-dmk-msb-453925.html

கொரோனா 2 wave அறிகுறி எப்படி இருக்கும்? விளக்கம் அளிக்கும் மருத்துவரின் வீடியோ!

கொரோனா நோய்த்தொற்றின் ஆரம்பக் கட்டத்தல் சளி, காய்ச்சலை மட்டுமே கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

விஜய்சேதுபதி பட தாமதத்திற்கு பிரபல நடிகை தான் காரணமா?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தியிலும் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாலிவுட்டில் அவர் ஏற்கனவே

தமிழக மருத்துவ மனைகளிலும் படுக்கை இல்லையா? உண்மையை உடைக்கும் வீடியோ!

கொரோனா நோய்த்தொற்றின் தீவிரத்தால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்குத் தற்போது மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை,