இது பாலியல்வாதிகளின் உலகம்: இளம் பாடகர் குறித்து சின்மயி சர்ச்சை கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சியின் வீடியோ ஒன்றை தனது டுவிட்டரில் பதிவு செய்த பாடகி சின்மயி, ‘இது பாலியல்வாதிகளின் உலகம் என்றும், ஆண்களின் உலகம் என பதிவு செய்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது
விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இளம் பாடகர்கள் கார்த்திக் மற்றும் விஜய்பிரகாஷ் ஆகியோர்களை தொகுப்பாளர்களான மாகாபா மற்றும் டிடி வரவேற்றனர். அப்போது பாடகர் கார்த்தி சாதாரணமாக டிடியை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்
இது குறித்த வீடியோவை தனது டுவிட்டரில் பதிவு செய்த சின்மயி, ’மீடூ’ பிரச்சனையால் ஆண்களின் நற்பெயர்கள் மற்றும் தொழில் கெட்டுப் போய் விட்டதா? என்று கேலியாக குறிப்பிட்டு, ’இது ஆண்களின் உலகம், பாலியல் வாதிகளின் உலகம், அது வைரமுத்துவாக இருக்கட்டும் அல்லது ராதாரவி ஆக இருக்கட்டும் அல்லது வேறு யாராக இருக்கட்டும். ஆண்களின் வாழ்க்கை பாழாகி விட்டது என்று பெண்களுக்கு தெரிவிப்பதை நிறுத்துங்கள்’ என்று பதிவு செய்துள்ளார்
ஏற்கனவே வைரமுத்து மீது சின்மயி மீடூ குற்றச்சாட்டு கூறி இருந்தார் என்பதும் அதேபோல் இளம் பாடகர் கார்த்திக் மீதும் ஒரு சில பெண்கள் கூறிய குற்றச்சாட்டை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
இசை ஜாம்பவான்களின் entry ?? இன்னும் ஒரே நாள்ல THE GRAND LAUNCH OF SUPER SINGER
— Vijay Television (@vijaytelevision) January 23, 2021
சூப்பர் சிங்கர் - நாளை காலை 11 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #Karthik #VijayPrakash #SuperSinger #VijayTelevision pic.twitter.com/Ns9puo1TlP
Platforming molesters is everyone’s problem. Karthik has as much support as does Vairamuthu. If I remember right, Mr Srinivas sent messages to people on social media that they must ‘think why the fraternity wont support me for my cause’. So yeah - bro code.
— Chinmayi Sripaada (@Chinmayi) October 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments