சசிகலா சிறையை அன்றே உறுதி செய்த சிவன்மலை முருகன் கோவில்
- IndiaGlitz, [Thursday,February 16 2017]
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன்கோவில் புகழ்பெற்ற கோவில். சிவ வாக்கியர் சித்தரின் நினைவாக கட்டப்பட்ட இந்த கோயிலின் முக்கிய தெய்வம் முருகன்.
இந்தக் கோயிலின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த கோவிலின் பக்தர்களுக்கு முருகனே கனவில் வந்து ஏதாவது ஒரு பொருளை காட்டுவாராம். அந்த பொருளை கனவு கண்டவரே கோயிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்து கோவிலின் பெட்டியில் வைக்க வேண்டும் என்பது ஐதீகம்
கடந்த பல வருடங்களாக பல பக்தர்களின் கனவில் முருகன் தோன்றி அவர் கனவில் கேட்ட பணம், தண்ணீர், உப்பு, மண் போன்ற பல பொருட்களை வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் கனவில் வந்த பொருளுக்கு ஏற்றவாறு சில சம்பவங்களும் நடக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கனவில் தண்ணீர் வந்தால் சுனாமி, மஞ்சள் வந்தால் தங்கத்தின் விலை உயர்வு, ஆகியவை நடந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் பக்தர் ஒருவரின் கனவில் இரும்பு கைவிலங்கு வந்துள்ளது. அந்த பக்தரும் இரும்பு கைவிலங்கை வாங்கி கோவிலின் பெட்டியில் வைத்துவிட்டார். இதனால் பிரமுகர் யாரும் கைதாக இருப்பதாக அந்த பகுதியினர் கூறி வந்தனர். இவர்களின் கூற்றுக்கேற்ப தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா கைது செய்யப்பட்டு சிறைக்குள் சென்றுள்ளதாக அந்த பகுதி மக்கள் கூறுகின்றனர்.