"ஒரே நேரத்தில் இத்தனை உயிரிழப்புகளை பார்த்ததில்லை".. கதறும் இத்தாலி மருத்துவர்கள்..! #COVID19

உலகம் முழுக்க பரவிவரும் கொரோனா வைரஸால் அதிகம் பாதித்த நாடுகளில் சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி உள்ளது. வடக்கு இத்தாலியானது அதிக அளவில் நல்ல பயிற்சி பெற்ற மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட பகுதியாகும். கொரோனா பரவத் தொடங்கிய போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து விட்டு தயாராக்கத்தான் மருத்துவர்கள் இருந்தனர். ஆனால் அங்கு நடந்தது வேறு.

உலக அளவில் அதிக அளவு வயது முதிர்ந்தவர்களினைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இத்தாலி இரண்டாம் இடத்தில் உள்ளது. ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே அங்கு குளிர்காலம் நடப்பதால் வயதானவர்கள் சுவாச பாதை நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வந்துள்ளனர். இதனிடையே மக்களிடம் இல்லாத காரணத்தால் வைரஸ் வேகமாக தொடங்கியது. அடுத்தடுத்து வந்த நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. என்ன திணறி வந்த மருத்துவர்கள் கண்முன்னே பலர் உயிர் விட தொடங்கியுள்ளனர்.

மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இடமில்லாததால் யாரை காப்பாற்ற அதிக வாய்ப்பு இருக்கிறதோ அவர்களை மட்டுமே மருத்துவர்கள் காப்பாற்றுவதற்கு சிகிச்சையளித்து வருகின்றனர். சிகிச்சை கிடைக்காமல் உயிழப்பவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகின்றது. இன்றுவரை இத்தாலியில் 35,713 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

வயதான தங்கள் தாய் தந்தையர் கொரோனாவால் மரணிப்பதை கூட சாதாரணமாக கடக்கும் மனநிலைக்கு இத்தாலிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவர்கள், பலருக்கும் சிகிச்சை அளிக்க முடியாமல் கண்ணீர் விட்டு வருந்தும் வீடியோக்கள் இணையத்தில் சுற்றி வருகின்றன. போர் களத்தில் நடந்து செல்வது போல உள்ளது. ஒரே நேரத்தில் இத்தனை இறப்புகளை பார்த்ததில்லை என மருத்துவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.

More News

நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு நாளை தூக்குத் தண்டனை உறுதி!!! நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட 4 பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டது

தமிழகத்தில் மேலும் ஒருவரை தாக்கிய கொரோனா: அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் சுமார் 150 பேருக்கு மேல் பரவி உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில்

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை: தமிழக அரசுக்கு ரஜினி கோரிக்கை

இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் மிக வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

பிறந்து 6 நாட்களேயான பெண் குழந்தைக்கு எருக்கம் பால் கொடுத்து சிசுக்கொலை!!! 

21 ஆம் நூற்றாண்டிலும் சிலரிடம் பெண் பிள்ளை என்றால் தானாகவே ஒவ்வாமை வந்து விடுகிறது.

ஒரே படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் 14 பாடல்கள்: மார்ச் 20ல் ரிலீஸ்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் தனது பிசியான இசைப்பணியிலும் '99 சாங்ஸ்' என்ற திரைப்படத்தை தயாரித்து அந்த படத்திற்கு இசையமைத்தும் வருகிறார்.