"ஒரே நேரத்தில் இத்தனை உயிரிழப்புகளை பார்த்ததில்லை".. கதறும் இத்தாலி மருத்துவர்கள்..! #COVID19
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுக்க பரவிவரும் கொரோனா வைரஸால் அதிகம் பாதித்த நாடுகளில் சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலி உள்ளது. வடக்கு இத்தாலியானது அதிக அளவில் நல்ல பயிற்சி பெற்ற மருத்துவர்களையும் செவிலியர்களையும் கொண்ட பகுதியாகும். கொரோனா பரவத் தொடங்கிய போது அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்து விட்டு தயாராக்கத்தான் மருத்துவர்கள் இருந்தனர். ஆனால் அங்கு நடந்தது வேறு.
உலக அளவில் அதிக அளவு வயது முதிர்ந்தவர்களினைக் கொண்ட நாடுகள் பட்டியலில் இத்தாலி இரண்டாம் இடத்தில் உள்ளது. ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. ஏற்கனவே அங்கு குளிர்காலம் நடப்பதால் வயதானவர்கள் சுவாச பாதை நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் வந்துள்ளனர். இதனிடையே மக்களிடம் இல்லாத காரணத்தால் வைரஸ் வேகமாக தொடங்கியது. அடுத்தடுத்து வந்த நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. என்ன திணறி வந்த மருத்துவர்கள் கண்முன்னே பலர் உயிர் விட தொடங்கியுள்ளனர்.
மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இடமில்லாததால் யாரை காப்பாற்ற அதிக வாய்ப்பு இருக்கிறதோ அவர்களை மட்டுமே மருத்துவர்கள் காப்பாற்றுவதற்கு சிகிச்சையளித்து வருகின்றனர். சிகிச்சை கிடைக்காமல் உயிழப்பவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகின்றது. இன்றுவரை இத்தாலியில் 35,713 பேர் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
வயதான தங்கள் தாய் தந்தையர் கொரோனாவால் மரணிப்பதை கூட சாதாரணமாக கடக்கும் மனநிலைக்கு இத்தாலிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மருத்துவர்கள், பலருக்கும் சிகிச்சை அளிக்க முடியாமல் கண்ணீர் விட்டு வருந்தும் வீடியோக்கள் இணையத்தில் சுற்றி வருகின்றன. "போர் களத்தில் நடந்து செல்வது போல உள்ளது. ஒரே நேரத்தில் இத்தனை இறப்புகளை பார்த்ததில்லை" என மருத்துவர்கள் வருத்தத்துடன் கூறுகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments